ஆர்எஸ்எஎஸ் ரவி! வரி பணத்தில் தின்று கொழுத்து.. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! வேல்முருகன் காட்டம்
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தின்று கொழுத்து விட்டு, அம்மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி எனவும், கோட்சேவின் வாரிசான ஆர்.எஸ்.எஸ் ரவி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல் சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி
பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலில் ஒருவரான ஆர்.என்.ரவி, தமிழ் நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதன் முதலே, தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ் ரவி களமாடிக் கொண்டிருக்கிறார். நேரடியாக சொல்ல வேண்டுமானால், பாஜகவின் மாநில தலைவர் போன்றும், ஆர்.எஸ்.எஸ்-சின் பிரதிநிதியாகவும், அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தின்றுக் கொழுத்து விட்டு, அம்மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
அத்தகைய துரோகங்களின் தொடர்ச்சியாக, தற்போது வட மாநிலங்கள் குறித்தும், வடமாநில சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும், தென் மாநிலத்தவர்களுக்கு குறைவாகவே தெரிந்திருக்கிறது என்றும் இந்தியாவை எந்தவொரு அரசர்களும் உருவாக்கவில்லை என்றும் ரிஷிகள் தான் உருவாக்கியது என்றும் மீண்டும் மீண்டும் புராணக் கதைகளை கூறி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
தமிழைக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாட்டில் நின்று கொண்டு, தமிழர்களுக்கு பாடம் எடுக்கிறார். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கு பாடம் எடுக்கக் கூடிய அருகதை ஆர்.எஸ்.எஸ் ரவிக்கு கிடையாது. வடமாநில தியாகிகள் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
வடமாநில தியாகிகள் என்றால், எங்களுக்கு மகாத்மா காந்தியும், சுபாஷ் சந்திரபோஸூம், அண்ணல் அம்பேத்கரும் தெரியும். இவர்களை தவிர, அந்த வடமாநில தியாகிகள் என அவர் யாரை குறிப்பிடுகிறார்? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவையா? முதலில் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி பேச கோட்சே கும்பலின் அடியாளான ஆர்.என்.ரவிக்கு என்ன அருகதை இருக்கிறது?
இந்திய ஒன்றியத்தின் சுதந்திரத்திற்கு ஒரு துளி துரும்பைக் கூட எடுத்துப் போடாத ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அடியாள் ஆர்.என்.ரவி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை; அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஏற்கெனவே பதவி காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஈடுபட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications