வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுகிறது தமிழக அரசு! பால் கொள்முதல் விலை குறைவு! வேல்முருகன் வேதனை!
கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் விமர்சிக்க தயங்காத வேல்முருகன்.
சென்னை: ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடரும்பட்சத்தில் தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் உஷார்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பால் கொள்முதல் விலை
தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற மிகக்குறைந்த விலைக்கே பாலை கொள்முதல் செய்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பால் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலைக் கொட்டிப் போராட்டம்
குறிப்பாக, விவசாயிகள் சாலையிலும், தரையிலும் பாலைக் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களால் ஆவின் பால் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

வெந்தப் புண்ணில் வேல்
இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளை பாரமரிப்பது உள்ளிட்ட காரணங்களால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை புரிந்துக் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும்.

அபாயம்
கடந்த பல ஆண்டுகளாகவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது. மீதமுள்ள 7 ரூபாயை இப்போது உயர்த்தி வழங்க வேண்டும் என்று தான் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடரும் பட்சத்தில், தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ரூ.7 உயர்த்தி வழங்குக
எனவே, இவ்விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ரூ.7 உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications