சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலக்கரி தட்டுப்பாடு; மின் வெட்டு ஏற்படும் சூழல்; மத்திய அரசு பொறுப்பின்றி இருக்கிறது -வேல்முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்படும் சூழலில், மத்திய அரசு பொறுப்பற்ற தன்மையோடு நடந்துகொள்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு நொடிக்கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதை வரவேற்பதாகவும், தமிழக அரசுக்கு தனது பாராட்டு எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

என்ன ஆச்சரியம்.. உலகம் முழுக்க பேச்சு.. ஒரே நேர்கோட்டில் 10 ஆயிரம் கி.மீ பறந்து இடம் பெயர்ந்த கழுகு என்ன ஆச்சரியம்.. உலகம் முழுக்க பேச்சு.. ஒரே நேர்கோட்டில் 10 ஆயிரம் கி.மீ பறந்து இடம் பெயர்ந்த கழுகு

நிலக்கரி

நிலக்கரி

இந்தியாவின் மின் உற்பத்தி 70 விழுக்காடு நிலக்கரியை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் உள்ளது.

மீண்டும் மூடப்படும்

மீண்டும் மூடப்படும்

கொரோனா ஊடரங்கிற்கு பின்னர், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கி வரும் இச்சூழலில், வருமானத்தை இழந்து தவித்து வந்த தொழிலாளர்கள் தற்போது தான் பணிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். பண்டிகை காலங்களும் தொடங்கி விட்டன.இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், தொழிற்சாலைகள் மீண்டும் மூடப்படும் நிலை ஏற்படும்.

தப்பிக்க முயற்சி

தப்பிக்க முயற்சி

தொழிலாளர்கள் வேலையிழந்தும், வருமானத்தை இழந்தும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நாட்டின் நிலக்கரி இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை ஒப்புக்கொண்டுள்ள ஒன்றிய அரசு, மின் உற்பத்தி செய்யக்கூடிய சில தனியார் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தி விட்டு தப்பித்து கொள்ளலாம் என நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Recommended Video

    ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க - வேல்முருகன் அறிவுரை
    அதல பாதாளம்

    அதல பாதாளம்

    மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதற்கான செலவு அதிகரித்துள்ளது என்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய முடியவில்லை எனவும் ஒன்றிய அரசு விளக்கமளிப்பது பொறுப்பற்ற தன்மையாகும். நிலக்கரி பற்றாக்குறை தொடர்ந்து நிலவினால், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மேலும் அதாள பாதாளத்திற்கு செல்லும். இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    English summary
    Velmurugan says, Union govt is irresponsible action in coal shortage issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X