வேல்முருகனுக்கு கோபம்! திமுக பீகாரிகளை துன்புறுத்துகிறதா? மோடியின் அதிர்ச்சி பேச்சுக்கு தவாக கண்டனம்
சென்னை: தமிழகத்தில் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது தமிழகத்தில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.. மேலும், கர்நாடகா- தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கிறார்கள்.. தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்றும் பிரதமர் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.
மோடியின் காழ்ப்பும், வெறுப்பும்
பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? என்று திமுக ஐடி விங்கும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பிரதமரே இப்படி பேசியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் இந்த கருத்து ஏற்கத்தக்கது அல்ல. பீகாரை சார்ந்தவர்கள் தமிழகத்தில் ஏதேனும் புகார்
அளித்தார்களா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை. பிரதமரின் பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று விசிக திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் கண்டனம்
இந்நிலையில், தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.. அந்த பதிவில், "தமிழகத்தில் பீகாரி மக்கள் துன்புறுத்தப் படுவதாகவும், அவமதிக்க படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பது, முழுமையாக ஆதாரமற்றது அரசியல் நோக்கம் உடையது ஆகும்.
தமிழ்நாடு என்றென்றும் மொழி, மத, இன வேறுபாடு கடந்து, ஒற்றுமையுடன் வாழும் மண்ணாக திகழ்கிறது. ஆனால் உண்மையில், 2014 ஆம் ஆண்டு முதல், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பின்னர், வட மாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம், தமிழ்நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இது சாதாரண வேலைவாய்ப்பு தேடல் அல்ல. தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பை மாற்றி, வருங்காலத்தில் இந்தி பேசும் வாக்காளர் அடிப்படையை உருவாக்கி, மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் நடக்கும் திட்டமிட்ட அரசியல் சதி.
பொறுப்பில்லாத பேச்சு
இதனிடையே பல வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது காவல் துறைப் பதிவுகள் மூலம் வெளிவந்துள்ளன. ஆனால், அதைப் பற்றிப் பிரதமர் மோடி அவர்கள் ஒரு சொல்லும் கூறாமல், மாறாக தமிழ்நாட்டு அரசையும், மக்களையும் குற்றம் சாட்டும் வகையில் பேசியிருப்பது மிகுந்த பொறுப்பில்லாத, தமிழகத்தின் மரியாதைக்கு எதிரானது ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிய இந்தப் பொய்யான, பிரிவினையை ஊக்குவிக்கும் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்
மோடி அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 2014 க்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வடமாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் வாக்குரிமை அமைப்பைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி ஆட்சியைத் திணிக்கும் பாசிச அரசியல் சதிகளுக்கு எதிராக தமிழர் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்" என்று வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications