"உதயசூரியன்" கொதிக்குதே.. "எடப்பாடி ஆட்சியை தூக்கியெறிஞ்ச மாதிரி".. திமுகவுக்கு வேல்முருகன் வார்னிங்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது... அதுபோலவே, உங்களுக்கு எதிராக எங்களை போராட வைக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் மிகுந்த அனலை கிளப்பி வருகிறது.
திமுக தன்னுடைய தனது தேர்தல் அறிக்கையில், 20 வருடங்கள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது.

தண்டனை:
ஆனால் 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் திமுக அரசு அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சீமான் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், அதிகாரம் கையிலிருந்தும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையைப் பெற்றுத்தர மறுப்பதோடு, அச்சிறைவாசிகள் நடத்தும் சட்டப் போராட்டத்திலும் முட்டுக்கட்டை போடுவது மன்னிக்கவே முடியாத கொடுந் துரோகமாகும்.
சிறைவாசிகள்:
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், தேர்தல் காலத்திலும், இடைத்தேர்தல் காலத்திலும் இஸ்லாமிய சமூகத்திடம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கெதிராக தங்கள் அணுகுமுறையை மாற்றுவது என்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறியிருந்தார்.
அந்தவகையில், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை திரும்பப்பெற்று, நீதிமன்றத்தின் மூலமாக ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கை நிறைவேற துணை நிற்க வேண்டும் என்றும் தொடர்ந்து திமுக அரசை, தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வாழ்வுரிமை கட்சி:
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இதே கோரிக்கையை இன்று விடுத்துள்ளார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஜுன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்திய போது அதில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஒருவேளை எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம்" என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

உதயசூரியன்:
சமீபகாலமாகவே, வேல்முருகனின் அரசியல் நிலைப்பாட்டில் மாறுதல் தென்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும்கூட, திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தயங்குவதில்லை.. அது அவரது பேட்டிகளிலும் தொடர்ந்து கவனிக்க முடிகிறது..
குறிப்பாக, சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என்று கூட்டணி கட்சியில் உள்ள வேல்முருகனே அன்று தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, முதல்வர் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்றும் வேல்முருகன் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இன்றைய தினமும் போராட்டம் குறித்த எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளார்.. இதை திமுகவும் கவனித்தே வருகிறது..!
-
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!









Click it and Unblock the Notifications