சட்டசபையில் சலசலப்பு! சபாநாயகருடன் மோதிய வேல்முருகன்.. குற்றச்சாட்டு அவை குறிப்பில் இருந்து நீக்கம்!
சென்னை: இந்த ஆண்டின் இறுதி சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் உரையாற்றிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதில் அதிருப்தியடைந்த சபாநாயகர், குற்றச்சாட்டுகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் அவை கூட வேண்டும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 10 நாட்கள் அவை கூட்டம் நடந்தது. இதனையடுத்து இன்று அவைக்கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் கூட்டம் நடைபெறுகிறது. இன்று அவை கூடியதும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எம்எல்ஏக்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கினர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், தன்னுடைய தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதாவது, "கடந்த 4 ஆண்டுகளில் என்னுடைய பண்ருட்டி தொகுதியில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அகன்டை, பெரிய பரண்டை, சின்ன பரண்டை, குமாரமங்கலம், பட்டாம்பாக்கம் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிரமாங்களில் மக்கள் வெள்ளம் காரணமாக பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் மனு ஒன்றை கொடுத்திருந்தேன். அதில் தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் குறித்து கோரிக்கை வைத்திருந்தேன்.
அமைச்சரும் நடவடிக்கை எடுத்து துறைக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்பணி பாதியிலேயே நின்றிருக்கிறது. என்னுடைய தொகுதியில் துரைமுருகன் தலைமை வகிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை" என்று கூறியிருந்தார்.
இதற்கு உடனே குறிப்பிட்ட அவை தலைவர் அப்பாவு, "கேள்வி நேரம் என்பது கேள்விக்கானது மட்டுமே, குற்றச்சாட்டுகளுக்கானது அல்ல. எனவே, இந்த குற்றச்சாட்டை அவை குறிப்பிலிருந்து நீக்கி விடலாம்" என்று கூறினார். உடனே பதிலளித்த வேல்முருகன், "செய்யவில்லை என்றால் செய்யவில்லை என்றுதானே சொல்ல முடியும்?" என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் வேல்முருகனும், அவை தலைவரும் மோதிக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications