அதிரடி.. நடிகர் சிம்புக்கு வந்த சிக்கல்.. ரூ.1 கோடி உத்தரவாதம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.1 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரன் என்ற சிம்பு. இவருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதாக கூறிய சிம்பு அதன்பிறகு படப்பிடிப்பு செல்லவில்லை என தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியது.

மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையேயான பிரச்சனை என்பது வெளியுலகிற்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ எங்கள் நிறுவனம் கொரோனா குமார் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்தோம். முன்பணமாக அவருக்கு நான்கரை கோடி ரூபாய் கொடுத்தோம். இது கடந்த 2021ம் ஆண்டு நடந்தது.
இந்த பணத்தை பெற்று கொண்ட பிறகு சிம்பு படப்பிடிக்கு வரவில்லை. மாறாக வேறு படங்களில் நடிக்கிறார். இதனால் பிற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நடிகர் சிம்புவுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
அதாவது நடிகர் சிம்பு தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என நிபந்தனை விதித்தார். அதோடு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த உத்தரவால் நடிகர் சிம்புவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications