ஜூன்22 பொதுக்குழு அறிவிப்பு முதல் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் சரமாரியாக அடிவாங்கிய தீர்ப்புகள்!
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஒவ்வொரு நகர்விலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியைத்தான் தழுவி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றம் இன்ற்ம் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அதிரடி தீர்ப்பு வழங்கி இருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப் பெரும் பின்னடைவு.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக வலியுறுத்திய தருணத்தில் 2022-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ஜூன் 23 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆகையால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருதார் ஓபிஎஸ். ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நிராகரித்து உத்தரவிட்டார்.

விடிய விடிய விசாரித்தும் தோல்வி: சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. விடிந்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம்.. ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் பெஞ்ச் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், ஜூன் 23 பொதுக்குழு நடைபெறும்; ஆனால் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆக்ரோஷம் காட்ட, தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்ய, அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் ஜூலை 11-ல் புதிய பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
திருப்பிவிட்ட உச்சநீதிமன்றம்: ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்றுதான் ஒருவழியாக இறுதி முடிவுக்கு வந்துள்ளது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கும் ஓபிஎஸ் தடை கேட்டு உச்சநீதிமன்றம் போனார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் உச்சநீதிமன்றமோ தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகளை மீண்டும் தட்டினார் ஓபிஎஸ்.
பொதுக்குழு கூட்ட அனுமதி: ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ந் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்றார். அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியிருந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்திருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ, ஜூலை 11 பொதுக்குழுவை கூட்ட அனுமதித்து உத்தரவிட்டது. அந்தப் பொதுக்குழுவில்தான் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
அதிமுக ஆபீஸ் வழக்கில் பின்னடைவு: இப்போது ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை முன்வைத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதேபோல அதிமுக தலைமை அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜூலை 20-ந் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தலைமை கழக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதுவும் ஓபிஎஸ் தரப்புக்கு கடும் பின்னடைவானது.
ஓபிஎஸ்-க்கு ஆறுதலான ஒரு தீர்ப்பு: ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதி கிருஷ்ண ன் ராமசாமிக்கு பதில் நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ந் தேதி ஒரு தீர்ப்பளித்தார். அதில், ஜூலை 11 பொதுக்குழு கூட்டமே செல்லாது; ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலைமை தொடர வேண்டும் என உத்தரவிட்டார். இது ஒன்றுதான் ஓபிஎஸ் தரப்புக்கு ஆறுதலான தீர்ப்பு.
உயர்நீதிமன்றத்தில் தோல்வி: ஆனால் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் பெஞ்ச் விசாரித்து செப்டம்பர் 2-ந் தேதி தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில். ஜூலை 11 பொதுக்குழு செல்லும்; அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்: இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றம் போனது. அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரியது ஓபிஎஸ் தரப்பு. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு ஆறுதலாக அமைந்தது. பின்னர் நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும்; ஆனால் பொதுக்குழுவின் தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என தெரிவித்தது. இதுவும் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவானது.
மீண்டும் அப்பீல்: இதனடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த 4 மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதன் மூலமாக ஓபிஎஸ் தரப்பு ஓராண்டுக்கும் மேலாக அத்தனை சட்டப் போராட்டங்களும் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டன.
-
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications