3 நாட்களுக்கு மிக கனமழை..உஷார்..தயாராக இருங்கள்..தமிழக பேரிடர் மீட்பு துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்து வரக்கூடிய 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பேரிடர் மீட்பு பணிகள் துறை

பேரிடர் மீட்பு பணிகள் துறை

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு தேவையானவற்றை தயார்நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு பேரிடர் மீட்பு துறை முதன்மை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அந்த அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில், 20ம் தேதி தமிழகத்தில் இருக்க கூடிய செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

 மிக கனமழை

மிக கனமழை

அதேபோல 21ஆம் தேதி வடதமிழக மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களுக்கு மிக கனமழை

15 மாவட்டங்களுக்கு மிக கனமழை

22ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+