பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை வெளியீடு! பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சென்னை: பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "ன் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிட்டமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர். இவர் போரிட்ட எந்த ஒரு போரிலும் தோல்வியை கண்டதில்லை என்று வரலாறு சொல்கிறது. இவரது நினைவாக தபால் தலை வெளியிட வேண்டுமென அந்த சமுதாயத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழக அரசு சார்பிலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications