குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சிபி ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி! ரிசல்ட் இதுதான்! பரபர தகவல்
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனும், ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் களம் காண்கின்றனர். 394 எம்பிக்களின் ஆதரவை பெறுபவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கும் நிலையில், 422 எம்பிக்களின் ஆதரவு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு இருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கு முன்பு குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதை ஏற்ற நிலையில், துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சிபி ராதாகிருஷ்ணன்
தேர்தல் ஆணையம் போட்டி இருந்தால் செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது. இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ கூட்டணி) சார்பில், காராஷ்டிர ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டி இடுகின்றனர்.68 வயதான ராதாகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்தவர். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை கடுமையாக எதிர்த்து வந்தவர். இரண்டு முறை (1998, 1999) மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது மகாராஷ்டிராவின் ஆளுநராக பணியாற்றி வருகிறார். எளிமையான பண்பு, சர்ச்சைகளில் சிக்காத அரசியல்வாதி என்ற பெயர் அவருக்கு உள்ளது.
சுதர்சன் ரெட்டி
மறுபுறம், 79 வயதான சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். குறிப்பாக கறுப்பு பண வழக்கு, நக்சலைட் பிரச்சனை போன்றவற்றில் அவர் வழங்கிய தீர்ப்புகள் வரலாற்று சிறப்புமிக்கவையாக கருதப்படுகின்றன. மேலும், ஆந்திர மண்ணின் மைந்தன் என்ற வகையில், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு செக் வைக்கும் வகையில், காங்கிரஸ் சுதர்சன் ரெட்டியை களமிறக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள்
இந்நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில், மொத்தம் 786 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 394 வாக்குகள் பெறும் வேட்பாளர் இந்தியாவின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். மக்களவையில் மொத்தம் 542 எம்பிக்கள் உள்ளனர். அதில் 293 பேரின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 240 எம்.பிக்கள் உள்ளனர். அதில் 129 பேர் என்டிஏ கூட்டணியை ஆதரிக்கிறார்கள். இதனால் இரு அவைகளிலும் சேர்த்து 422 வாக்குகள் என்டிஏ கூட்டணிக்கே உள்ளது.
யாருக்கு வெற்றி?
பிஆர்எஸ், பிஜேடி போன்ற கட்சிகள் வாக்குப்பதிவில் பங்கேற்காததால் போட்டி மேலும் ஒருதலைப்பட்சமாகி விட்டது. எனவே சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகவே பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், அது தமிழக அரசியலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதியில் பாஜக வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications