வளைத்து வளைத்து என்டிஏவுக்கே குத்தப்பட்ட ஓட்டு? பீகாரில் அத்தனை குழப்பம் இருந்தும் BJPக்கே வெற்றி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததுமே இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின.. இதில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பானது பாஜக கூட்டணிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், தெம்பையும் தந்து வருகிறது.

243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

BJP Bihar NDA alliance

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்கு சதவீதம், பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பதிவாகியுள்ளது. மொத்தமாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின.கடந்த 25 ஆண்டுகளில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியதும் இதுவே முதல் முறை.

எதிர்பார்ப்புகள்

அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இன்றைய தினம் மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 14-ந் தேதி நடக்கிறது.

நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்

243 தொகுதிகளில் தங்கள் வாக்குகளை செலுத்தி முடித்துள்ளனர். நிதீஷ் குமாரின் நீண்ட ஆட்சிக்கும், தேஜஸ்வி யாதவ் சவாலுக்கும் இடையேயான கடுமையான போட்டி இந்த தேர்தலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது.

காரணம், 20 வருடங்களாக முதல்வர் நாற்காலியை தன்வசம் வைத்திருக்கும் நிதிஷ் குமாருக்கும், முதன்முறையாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கும் 35 வயது தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

ஓவைசி, பிரசாந்த் கிஷோர்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகாகட்பந்தன் எனப்படும் மகா கூட்டணிக்கும் இடையே போட்டி என்றாலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், ஓவைசியும் மோதலில் இறங்கவும், தேர்தல் களம் படுசூடானது.

Pollstrat வெளியிட்டுள்ள எக்ஸிட் போலில், என்டிஏ கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைத்துள்ளன.. அந்தவகையில், 133-148 இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும், 87-102 இடங்கள் மகாபந்தன் கூட்டணியும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறது.

பாஜக மகிழ்ச்சி

அதேபோல, பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணியே வெல்ல வாய்ப்பு என்று Matrize எக்ஸிட் போல் சர்வேயிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதில், 147 முதல் 167 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், இந்தியா கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும் Matrize எக்ஸிட் போல் கணித்துள்ளது..

அதேபோல, டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 142 - 145 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கு 88 முதல் 91 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இதுவரை வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் என்டிஏ கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சார் - நடவடிக்கை - பின்னடைவு?

இத்தனைக்கும், எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பீகாரில் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது, SIR நடவடிக்கைக்கு எதிரானவை என்று எதிர்க்கட்சிகள் பேசிவந்தன..

அதேபோல நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் பாஜகவின் தயக்கம், பாஜக மீது நிதிஷ் கட்சியினருக்கு ஏற்கனவே உள்ள அதிருப்தி போன்றவை அனைத்துமே மைனஸாக பார்க்கப்பட்டபோதும்கூட, என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக இப்போதைய எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

கணிப்புகள் சொல்வதென்ன

பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்கு என்றே பார்க்கப்படும்... ஆனால், அப்படியான கணிப்புகளை எல்லாம் இப்போதைய எக்ஸிட் போல் நொறுக்கி தள்ளியிருக்கிறது..

தேர்தல் நெருக்கத்தில் நிதிஷ் குமார் பல்வேறு தரப்பினருக்கும் எண்ணிலடங்கா அறிவிப்புகளை வெளியிட்டதும், பண மழையை பொழிந்ததும் மக்களின் மனதை ஈர்த்ததா? வேலைவாய்ப்பு பிரச்சனையை தெரியவில்லை. எனினும், இவை யாரும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் என்றாலும், வாக்குகள் எண்ணப்பட்டு ரிசல்ட்கள் வந்தால்தான் பீகாரில் உண்மையிலேயே அரியாசனம் ஏறப்போவது யார் என்பது தெரியவரும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+