சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி.. பேரறிவாளன் விடுதலையை விமர்சித்த காங். பிரமுகர் அமெரிக்கை நாராயணன்

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளன் விடுதலை என்பது பணநாயகத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் 142யை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது ஏன்? பேரறிவாளன் விடுதலையின் பின்னணி விபரம்அரசியலமைப்பு சட்டம் 142யை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது ஏன்? பேரறிவாளன் விடுதலையின் பின்னணி விபரம்

கிடப்பில் போட்ட ஆளுநர்

கிடப்பில் போட்ட ஆளுநர்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Recommended Video

    Perarivalan First Speech After Release | Perarivalan Pressmeet | Oneindia Tamil
    ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?

    ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?

    அப்போது "தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்." என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், "விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு" என்று தெரிவித்தனர்.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    இந்த நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் கருத்து

    காங்கிரஸ் கருத்து

    இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிராபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம்" எனக் கூறினார்.

     அமெரிக்கை நாராயணன்

    அமெரிக்கை நாராயணன்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான அமெரிக்கை நாராயணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி." என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவரது இந்த கருத்துக்கு ட்விட்டரில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Victory for terrorism - Congress leader Americai Narayanan condemns Perarivalan release: பேரறிவாளன் விடுதலை என்பது பணநாயகத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X