ஒரு நிமிடம் கூட முழுசாக இந்த வீடியோ இல்லை.. மொத்தமாக வசீகரித்து விட்ட அழகு தமிழச்சி

தந்தையின் சிறப்பை குறித்து இளம்பெண் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இணையத்தில் வைரலாகி வரும் அழகு தமிழச்சியின் வீடியோ

    சென்னை: மார்டன் பொண்ணுதான்.. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தூய தமிழில் தேனாக வந்து தெறித்து விழுகிறது. இந்த பொண்ணுதான் இதையெல்லாம் பேசுகிறாரா என்று ஆச்சரியமாக உள்ளது.

    இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிகப்பு நிற சட்டை அணிந்து ஒரு இளம் பெண் தோன்றுகிறார்.

    கிராப் தலை, பார்க்கவே படு மார்டனாக உள்ளார். ஏதோ பியூட்டி டிப்ஸ், டப்ஸ்மேஷ் போல இருக்கும் என்று பார்த்தால், யாருமே எதிர்பாராத வகையில் அப்பாக்களின் சிறப்புகளை எடுத்து கூறுகிறார்.

    குறிப்பு இல்லை

    குறிப்பு இல்லை

    ஒவ்வொரு வார்த்தைகளும் அழகு... ஒவ்வொரு வரிகளும் சிறப்பு.. தமிழ் மொழி இப்பெண் பேசுவதன் மூலம் மேலும் இனிமையாக தெரிந்தது. கையில் எந்த வித குறிப்பும் வைத்து கொள்ளாமல் மிக இயல்பாக இந்த பெண் பேசுகிறார். அந்த பெண் வீடியோவில் பேசியதாவது:

    மலர்ப்பாதை

    மலர்ப்பாதை

    "அப்பா தன்மானமுள்ளவர். பிறர் கால் பிடிக்க பணிவதில்லை. தன் பிள்ளைகளுக்கு இழுக்கு என்றால் பிறர் கால் பிடிக்கவும் தயங்குவதில்லை. அவர்தான் தந்தை... உலகின் விந்தை. மலர்ப்பாதையை கொடுத்துவிட்டு, தினம் தினம் முள்மீது நடப்பவர். தானே கலங்கிவிட்டால், குடும்பம் தாங்காது என்று பல நேரங்களில் தன்னை கல்லாக்கி கொண்டவர்.

    மடிந்திருப்பார்

    மடிந்திருப்பார்

    நாம் சுகத்தில் குளித்ததும், ஆனந்தத்தில் திகைத்ததும் அவரது வியர்வையில்தான் என்று பல நேரங்களில் மறந்து விடுகின்றோம் அவரை. வாழ்க்கையில் துன்பப்பட்டு அவர் மடிதேடும்போது அவர் மடிந்திருப்பார். அப்போதும் அவர் சிரித்திருப்பார் நம் வீட்டு புகைப்படத்தில்.

    நமக்கு அம்மா

    நமக்கு அம்மா

    அடித்து பயத்தை விதைத்த ஆசிரியரை முறைத்தபடி பயத்தை அறுவடை செய்யும் நம் அப்பா நமக்கு அம்மா. உருப்படாது எனும் ஊராரின் வார்த்தையை ஒருபோதும் காதில் போட்டுக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் நம்மை பார்க்கும் நம் அப்பா நமக்கு அம்மா.

    ஆண்டவன் தேவையில்லை

    ஆண்டவன் தேவையில்லை

    அவர் துன்பத்தை ஒரு போதும் கண்ணிலோ, இதழிலோ வெளிப்படுத்தாமல் துன்பத்தை வேரோடு விழுங்கும் நம் அப்பா நமக்கு அம்மா. மொத்தத்தில் அப்பா அம்மாவாகையில் ஆண்டவனும் தேவைப்படுவதில்லை" என்று இளம்பெண் பேசுகிறார்.

    ஒரு நிமிடம்கூட முழுசாக அந்த வீடியோ இல்லை. ஆனால் மொத்தமாக எல்லார் மனசிலும் இந்த பெண் நின்றுவிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+