ஷவர்மாவ விடுங்க... சென்னையில் வட இந்தியர்கள் நடத்தும் சமோசா கடையின் லட்சனம் - மக்கள் புகார்
சென்னை: பெரியமேடு சாலையோரம் வடஇந்தியர்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் சாலையோர சமோசா கடை மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

வட இந்தியர்களின் சமோசா கடை
இதனிடையே ஷவர்மா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தான் சென்னையில் வட இந்தியர்களின் சாலையோர சமோசா கடை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சகாதாரக் குறைவு
பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் வட இந்தியர்கள் 4 பேர் இணைந்து சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, ஸ்பிரிங் ரோல் மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இன்றியும் உணவில் அதிகளவில் நிறம் சேர்த்து பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் இந்த கடையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஈ, கொசுக்கள்
சாப்பிடும் தட்டிலும் உணவு பொருட்களிலும் ஈ, கொசு போன்றவைகள் மொய்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சாலையோரம் உள்ள தரமற்ற உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டால் பொதுமக்களின் நலனை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications