கையில் வாக்கி டாக்கியுடன் விக்னேஷ் சிவன்.. ஓ செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவா.. ஏற்பாடுகள் என்னென்ன?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா? வாக்கி டாக்கியுடன் விக்னேஷ் சிவன் பரபரத்து வருகிறார்.
சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி அருகே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழா கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இவர் விழா தொடங்கிய போதும் கூட வாக்கி டாக்கியுடன் சில அறிவுறுத்தல்களை சொல்லி வந்தார். இந்த விழா சிறப்பாக நடந்ததாக அனைவருமே விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. நிறைவு விழாவிலும் விக்னேஷ் சிவன்தான் இயக்குநர். முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவர் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குகிறார். மேடையில் செஸ் போர்டு வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் 600 கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
Recommended Video

பிரம்மாண்டம்
தொடக்க விழா எத்தனை பிரம்மாண்டமாக நடைபெற்றதோ அது போல் நிறைவு விழாவும் நடைபெறுகிறது. டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முப்பரிமாண வடிவில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் வீரர், வீராங்கனைகள்
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர், வீராங்கனைகள் மாமல்லபுரத்திலிருந்து நேரு உள்விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். விழா மேடையில் பெரியார், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பரிசளிப்பு
அது போல் கேபி சுந்தராம்பாள் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. கண்கவர் நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேடையில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர கீழே இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மேடையில் வீரர்களுக்கு கோப்பைகளையும் பதக்கங்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications