மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது.. பிரபலம் என்றால் யார் என்று கேள்வி எழுப்பியுள்ள கிருத்திகா உதயநிதி, அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அது தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடுவதாக அமைந்திருக்கிறது.
அண்மை காலமாக தவெக தலைவர் விஜய் அரசியல் ரீதியாகவும், சொந்த வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்து வருவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கரூர் சம்பவத்திற்கு முன்பு வரை விஜய்யின் அரசியல் வாழ்க்கை உச்சத்தில் இருந்த சூழலில், 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரத்தில் விஜய் சுயபரிசோதனை செய்யாமல் திமுக மீது குற்றம்சாட்டியது பேசுபொருளாகியது.

தொடர்ந்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் கூறினார். அதேபோல் சிபிஐ விசாரணைக்கு சென்று பொங்கல் விழாவில் பங்கேற்க விடுப்பு தேவை என்றார். ஆனால் பொங்கல் விழாவை கூட விஜய் கொண்டாடவில்லை. இதையடுத்து விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினாலும், அதில் திமுக மீதான வெறுப்பு மட்டுமே இருந்தது.
இதனால் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்காமல், தமிழ்நாட்டின் எதிர்கால திட்டங்களை சொல்லாமல் தீயசக்தி திமுக என்று மட்டுமே பேசி வந்தார். இப்படியான சூழலில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விஜய்க்கு நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
அதற்கேற்ப கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் - திரிஷா இணைந்து ஒரே காரில் வந்து, ஒரே நிறத்தில் ஆடையணிந்து, ஒன்றாக தம்பதியை வாழ்த்தினார். இது தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வேலூரில் விஜய் பேசுகையில், தமிழ்நாடுதான் விஜய்.. விஜய்தான் தமிழ்நாடு.
விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை, விஜய்யும் மக்களும் உடலும் உயிரும் போல. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி செய்கிற ஸ்டாலின் சார் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதுவரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்கள் கூட நான்தான் தமிழ்நாடு என்று கூறிக் கொண்டதில்லை. இதனால் விஜய்யின் பேச்சிற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில் இயக்குநரும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அது விஜய்க்கு மறைமுகமாக அட்வைஸ் கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதில் பிரபலம் என்றால் யார்? என்று கேள்வி கேட்டு, அவரே பதில் அளித்துள்ளார்.
அதில், ஒரு தனி மனிதனையும், பிரபலத்தையும் வித்தியாசப்படுத்துவது மக்களின் கண்ணோட்டம் தான். அந்த கண்ணோட்டத்தையே தாம் என்று நம்பி தனது சுயத்தை இழப்பது மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும் என்று கூறியுள்ளார். இது திமுகவினர் மட்டுமல்லாமல் தவெகவினர் மத்தியிலும் டிரெண்டாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு.. திருப்பூரில் விஜய் வாக்குறுதிகள் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications