Vijay : அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கு அடங்கி போற ஆளா நான்? இந்த மூஞ்சிய பார்த்தா அப்படியா தெரிது? விஜய்
சென்னை: நமது அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நான் ஏன் அழுத்தமாக சொல்கிறேன் என்றால் அழுத்தம் இருக்கிறதா என நினைக்கிறீர்களா, அழுத்தத்திற்கு அடங்கி போற ஆளா நான் என விஜய் கேள்வி எழுப்பினார்.
மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நான் அழுத்தமாக சொல்கிறேன். இதை நான் அழுத்தமாக சொல்வதால் ஏதாவது அழுத்தம் இருக்கிறதா என நினைக்கிறீர்களா, அழுத்தமா நமக்கா?

அழுத்தத்திற்கு அடங்கி போற ஆளா நான்? இந்த மூஞ்சியை பார்த்தா அப்படியா தெரிது! அழுத்தம் இருக்கிறதா என்றால் இருக்கிறது ஆனால் நமக்கில்லை. மக்களுக்குத்தான் அழுத்தம்!
மாற்றி மாற்றி வாக்களித்து மக்கள் ஏமார்ந்து போயிருக்கிறார்கள். அதிமுக நேரடியாக சரணடைந்துவிட்டது. திமுக மறைமுகமாக சரணடைந்துள்ளது, அவ்வளவுதான் வித்தியாசம்!
என்னப்பா, இப்பதான் வந்திருக்காரு, இவர் கூட யார் வரப்போறா, அவங்க வரமாட்டாங்க, இவங்க வரமாட்டாங்கன்னு நம்மள அண்டர் எஸ்டிமேட் பண்றாங்க. ஆனால், மக்கள் என்னை சரியாக எடைபோட்டு, எனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நம்ம பிள்ளை ஆச்சே, நம்ம அண்ணன் ஆச்சே, நம்ம தம்பி ஆச்சேன்னு சொல்லி, அவங்க மனசுல அப்படி தோணுது. இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இல்ல இப்ப இருக்கறவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன்.
ஒரு பைசா தொட மாட்டேன். ஒரு துளி ஊழல் கரை கூட படியவே படியாது, படியவும் விடமாட்டேன். இந்த தீய சக்தியா இருக்கட்டும், இந்த ஊழல் சக்தியா இருக்கட்டும், ரெண்டு பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது என்றார்.
எந்தவிதமான சூழ்ச்சிகளையும், அழுத்தங்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், மக்களுக்கு தீங்கு செய்பவர்களிடமிருந்து அவர்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்திருப்பதாக விஜய் குறிப்பிட்டார்.
தன்னுடன் இணைந்து பயணிக்கும் தோழர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், "தப்பு பண்ணா யாரா இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற அந்த பயம் இருக்கணும்" என்றார்.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ்










Click it and Unblock the Notifications