நாம் தமிழர் + விஜய்.. செக் திமுகவிற்கு இல்லை.. பாஜக, அதிமுகவிற்கு ஒரே நேரத்தில் ஆப்பு வைக்கும் தவெக?
சென்னை: சட்டசபை தேர்தலில் மாநில கட்சிக்குத்தான் மக்கள் அதிக இடம் கொடுப்பார்கள். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுகவின் இடத்தை பிடிக்காது. சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இதனால் நாம் தமிழர் வளரலாம். அவருடன் விஜய் சேர்ந்தால் கண்டிப்பாக நல்ல வலிமை பெறும். திமுகவிற்கு இவர்கள் போட்டியாக வரலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து உள்ளதாக அண்ணாமலை கூறி வரும் நிலையில் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அது பற்றி பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி; அதில், என்னதான் தண்ணீர் குடிச்சாலும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் வலிமை பெற முடியாது. பாஜக வலிமை பெற முடியாது. அதிமுகவும் இந்த சட்டசபை தேர்தலில் முன்னேற முடியாது. அவர்களுக்கு உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு 1% வாக்கு கூடிவிட்டது என்கிறார்கள். கடந்த முறையை விட 10 இடங்கள் கூடுதலாக போட்டியிட்டு உள்ளனர். அப்படி இருக்க அதிமுக எப்படி முன்னேற முடியும்.
இங்கே தமிழ்நாட்டில் பாஜக வளரவில்லை. பாஜக வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை வாக்கு வங்கி உயர்ந்தது என்று சொல்வதில் உண்மை இல்லை. அது டெல்லிக்கு புரிந்தால் பாஜக அவரை மாற்றும். பாஜக இந்த அளவிற்கு சட்டசபை தேர்தலில் வாக்குகளை வாங்காது. லோக்சபா தேர்தலில் வாங்கிய அளவிற்கு கூட பாஜக வாங்காது. பாமகவும் இந்த கூட்டணிக்கு செல்லாது. இது மோடி பற்றிய தேர்தல் என்பதால் பாஜகவிற்கு கொஞ்சம் வாக்கு வந்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் வராது.
இதற்கு இடையில் அண்ணாமலை நடந்து கொள்ளும் விதம், அவர் ரவுடிகளை கட்சியில் இணைத்தது, கூட்டணியில் சொதப்பியது, மூத்த தலைவர்களை கட்சியை விட்டு அனுப்பியது என்று பல விஷயங்களை குறிப்பிட்டு பெரிய ரிப்போர்ட் அனுப்ப உள்ளாராம் தமிழிசை. முக்கியமாக அண்ணாமலையின் வார் ரூம் செயல்படும் விதத்தையும் ரிப்போர்ட்டாக தயார் செய்து மோடியிடம் கொடுக்க உள்ளாராம். இதற்காக மோடியை சந்திக்கவும் நேரம் கேட்க உள்ளாராம் தமிழிசை.
நாம் தமிழர் வளரலாம்: தமிழ்நாட்டில் இதனால் நாம் தமிழர் வளரலாம். அவருடன் விஜய் சேர்ந்தால் கண்டிப்பாக நல்ல வலிமை பெறும். அப்போதும் கூட சட்டசபையில் பாஜக மூன்றாம் இடத்திற்கே செல்லும். தேசிய கட்சியாக இருந்தால் அதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும். அதிமுக அப்படி ஒன்று சேரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த கட்சி காணாமல் போகும். தென் தமிழ்நாட்டிலேயே பாஜகவை விட அதிமுக மோசமான நிலையை அடைந்துள்ளது.
அதிமுக தெற்கில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளது. மாநில கட்சிக்குத்தான் மக்கள் அதிக இடம் கொடுப்பார்கள். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக அந்த இடத்தை பிடிக்காது. சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இதனால் நாம் தமிழர் வளரலாம். அவருடன் விஜய் சேர்ந்தால் கண்டிப்பாக நல்ல வலிமை பெறும். திமுகவிற்கு இவர்கள் போட்டியாக வரலாம்.
பழனிச்சாமி பிடிவாதம்: பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். அதனால் அந்த கட்சி கொங்கு கட்சி போல சுருங்கிவிடும். அதனால்தான் லோக்சபாவில் அதிமுக தெற்கில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளது. சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் முன்னேற வாய்ப்புகள் உள்ளன, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications