விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை.. சமீபத்தில் கூட.. கான்சர்ட்டில் நடந்த சம்பவம்.. நம்ப முடியலையே!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சமீபத்தில் விஜய் ஆண்டனி இசை கச்சேரியில் கலந்து கொண்ட சம்பவம் பலராலும் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் மீரா. மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு சென்ற பலர் நம்மிடம் பேசி உள்ளனர். அதில், அந்த மாணவி மீரா அவரின் அப்பா விஜய் ஆண்டனி கான்சர்டுக்கு வந்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த இசை நிகழ்ச்சி நடந்தது.
இதில் விஜய் ஆண்டனி உடன் அவர் இருந்தார். இதில் மிக சிறப்பாகவே அவர் காணப்பட்டார். சந்தோசமாக சிரித்தபடி அவர் காணப்பட்டார். அவருக்கு பின் இவ்வளவு மன அழுத்தம் இருக்கும் என்று நம்ப முடியவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கடுமையான மன அழுத்தத்திற்கு சென்று இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்றுள்ளனர்.
அவரின் பள்ளியை சேர்ந்தவர்களும், மீரா மிகவும் சுட்டி. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் ஏற்கனவே தற்கொலை எண்ணத்தோடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அது பற்றி விசாரணை செய்ய உள்ளனர். முதலில் மீராவின் பெற்றோரிடம் விசாரணை செய்ய உள்ளனர்.
அதை தொடர்ந்து அவரின் நண்பர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர். இவருக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் இவர் பள்ளியில் சிறப்பாக இருந்தாலும் மன ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். அப்பா இல்லாத நேரம் பார்த்து விஜய் ஆண்டனி அறைக்கு சென்றுள்ளார்.
அங்கே யாரும் இல்லாததால் அதை பயன்படுத்திக்கொண்டு அங்கேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து இருக்கிறார் மீரா. காலையில் வீட்டு உறுப்பினர்கள்தான் உடலை பார்த்து உள்ளனர். இதையடுத்து உடலை இறக்கி போலீசாருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றன.
பின்னணி: மீரா... நன்றாக படிக்க கூடியவர். அவர் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடியவர். முக்கியமாக பள்ளி கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து வந்தார். மிகவும் ஆர்வமான, சுட்டியான குழந்தை.
12ம் வகுப்பு படிப்பதால் கடுமையான பிரஷரில் இருந்துள்ளார். இது போக இவர் அடிக்கடி தூக்கம் இன்றி தவித்து உள்ளார். தூக்கம் வராமல் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இந்த மன அழுத்தத்திற்கு இவர் தெரபி சென்றுள்ளார்.

மனநல ஆலோசகரை சந்தித்து இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனக்கு இருக்கும் மன அழுத்தம், தூக்க பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இவர் நண்பர்களிடம் பேசி உள்ளார். மன அழுத்தத்திற்கு வெளிப்புற காரணங்கள் தேவையில்லை. அந்த வகையில் இவரின் மன அழுத்தத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக கடுமையாக தூக்கம் இன்றி தவித்து உள்ளார். இருந்தாலும் சமீபத்தில் கூட அவர் பள்ளியில் கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக கூட தேர்வானார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். தற்போது உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விஜய் ஆண்டனி மகளின் உடல்;. இறப்பு குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications