விஜய் கரூரில் போட்டியிட்டால்! ஜெயிக்க வைப்போம்! பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
சென்னை: கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கரூருக்கு வராததற்கான காரணம் என்பதையும் விஜய், பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்தாராம். கண்டிப்பாக ஒவ்வொருத்தரின் வீட்டிற்கு நேராக வருவதாகவும் வாக்கு கொடுத்தாராம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பத்தினரை விஜய், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் வைத்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் என்ன பேசினார் என்பது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விஜய் ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒரு அறைக்கு வரவழைத்தாராம். அப்போது அந்த குடும்பத்தினரின் காலில் விழுந்தாராம். உடனே பதறிய உறவினர்கள் அவரை தூக்கி விட்டனராம். அந்த அறையில் அவரிடம் போன் கூட இல்லையாம். முக்கியமாக பவுன்ஸர்கள் இல்லாமல் இருந்தாராம்.
இதுகுறித்து கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், விஜய் நாங்கள் உள்ளே நுழைந்ததும் முதலில் மாமல்லபுரத்திற்கு வரவழைத்ததற்கு என்னை மன்னியுங்கள் என்றார். பின்னர் எங்கள் குடும்பத்தில் இறந்தவர் யார், எங்கள் குடும்ப பின்னணி என்ன என கேட்டார்.
இறந்தவரின் புகைப்படத்தை பார்த்ததும் கண்ணீர்விட்டார். குழந்தைகளை இழந்த பெற்றோர் காலில் விழுந்து அழுதார். அவரை தூக்க முயன்றும் அவர் எழவே இல்லை. நாங்கள் கூட தெம்பாகத்தான் இருந்தோம். அவர் மனம் உடைந்து போயிருந்தார்.

அவர் அறையில் யாருமே இல்லை. அவரை அடித்தால் கூட கேட்க ஆளில்லாத அளவுக்கு தனியாகத்தான் இருந்தார். எங்கள் குடும்பத்தில் இருந்து மட்டும் 8 பேர் போனோம். 8 பேரின் காலிலும் விழுந்தார். குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்வதாகவும் படிப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக விஜய் தெரிவித்தார்.
இந்த இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு மகனாக, அண்ணனாக தம்பியாக உங்கள் குழந்தைக்கு தாய் மாமனாக இருந்து உங்களை பார்த்துக் கொள்வேன். எதுவாக இருந்தாலும் சொல்லுமாறு கூறினாராம்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினர் சொன்ன கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்வதாகவும் அவர் தெரிவித்திருந்தாராம். இவ்வாறு கரூர் சென்றவர்கள் எல்லாருமே விஜய் தங்கள் காலில் விழுந்ததாகவே சொன்னார்கள்.
மேலும் அவர் கண்டிப்பாக ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் வருவதாக சொன்னாராம். கரூரில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெற செய்வோம் என பெண்கள் தெரிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை












Click it and Unblock the Notifications