கிறிஸ்துமஸ் விழாவில் செங்கோட்டையனே வந்துட்டாரு! குமரி மாவட்டத்துக்காரர் நாஞ்சில் சம்பத் மிஸ்ஸிங்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வழக்கம் போல் நாஞ்சில் சம்பத்தை பார்க்க முடியவில்லை. அவரே சொந்த வேலை காரணமாக வரவில்லையா இல்லை அழைப்பு விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் நோன்பு உள்ளிட்டவை கொண்டாடப்படும். அந்தந்த கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வர்.
நெல்லையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். உடன் சபாநாயகர் அப்பாவுவும் இருந்தார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து இரண்டாவது ஆண்டு நடந்து வருகிறது.
ரம்ஜான் நோன்பு
கடந்த ஆண்டு ரம்ஜான் நோன்பில் விஜய் கலந்து கொண்டார். ஆனால் கிறிஸ்துமஸ் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது போல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என கண்டனங்கள் எழுந்தன.
கிறிஸ்துமஸ் விழா
இந்த நிலையில் தற்போது சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு மாமல்லபுரத்தை அடுத்து பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் எனும் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.
பூங்கொத்து கொடுத்த விஜய்
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் விஜய் , பேராயர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
1500 பேர்
பின்னர் கிறிஸ்துமஸ் விழா தொடங்கி முடிந்தது. இந்த விழாவில் மேடையில் விஜய், பேராயர்கள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தார்கள். விழாவுக்கு கட்சி நிர்வாகிகள் 1500 பேருக்கு கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டது.
யார் யார் பங்கேற்பு
இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், அருண்ராஜ் ஐஆர்எஸ், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், ஜேப்பியார் மருமகன் மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாஞ்சில் சம்பத் மிஸ்ஸிங்
இவர்கள் எல்லாம் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். ஆனால் கடைசியாக கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை இந்த விழாவில் பார்க்க முடியவில்லை. கட்சியில் சேர்ந்த செங்கோட்டையன் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.
செங்கோட்டையன் பிரசன்ட்
அது போல் ஈரோடு பொதுக் கூட்டத்திலும் நாஞ்சில் சம்பத்தை காணவில்லை. ஒரு வேளை அவருக்கு இங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் கிறிஸ்துமஸ் விழாவிற்கு வந்திருக்கிறார்.
கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி பகுதி
ஆனால் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தவெகவின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி கிறிஸ்துவர்கள் வாக்கு வங்கி அதிகம் உள்ள பகுதி.
நாஞ்சிலை அழைக்கவில்லையா?
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லையா, இல்லை அழைப்பே விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்தது. திமுக ஆதரவாளராக இருந்த போது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றுதான் அங்கிருந்து தவெகவுக்கு வந்தார். ஆனால் தவெகவிலும் இதே நிலைதானா என்ற கேள்வி எழுகிறது.
ஒன் இந்தியா தமிழ் சார்பில் விசாரித்த போது..
இதுகுறித்து தவெக முக்கிய நிர்வாகிகள் தரப்பிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் விசாரித்தோம். அப்போது அவர்கள் "நாஞ்சில் சம்பத் பொதுவாக மேடைகளில் பேச ஆரம்பித்தால் அவர் இஷ்டத்திற்கு பேசக் கூடியவர். இதனால் கட்சிக்கு தர்ம சங்கடம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரை இது போன்று விழாக்களுக்கு அழைக்காமல் தவிர்ப்பதாக" தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications