இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து!
சென்னை: சமகால இளம் தலைமுறையிடம் திராவிட கருத்தியலை கொண்டு சேர்க்க தவறிவிட்டோமோ என்ற கவலை இருப்பதாக திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு இருக்கும் ஆதரவு தொடர்பான கேள்விக்கு, இளம் வாக்காளர்களை கவர தவறிய இடைவெளியை விரைவில் சரிசெய்வோம் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதற்கேற்ப தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த இரு தொகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல் சிறுபான்மை மக்களும் அதிகமாக வசித்து வருகின்றனர்.

தமிழக அரசியலின் 3வது பெரிய சக்தியாக தவெக வளர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப விஜய்யின் வாக்கு சதவிகிதம் தொடர்பாக வெளியாகும் கருத்துக் கணிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா என்று கேட்டால், உலகம் முழுவதுமே வலதுசாரிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் கால் பதிக்க முடியாமல் பாஜக தடுமாறுகிறது.
அதற்கு காரணம் தமிழ்நாட்டில் பெரியாரின் கொள்கைகளை நிறுவி இருக்கிறோம். இங்கே கடவுள் இல்லை என்று சொல்லி கடவுள் நம்பிக்கைகள் இருப்பவர்களை தாக்குவது இல்லை. ஆனால் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் நடக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் தான் கோவிலுக்கும் செல்லும் மக்களும் கூட திமுகவுக்கு வாக்கு அளிப்பார்கள்.
தமிழ்நாட்டில் பெரியாரின் கருத்துகள் நன்றாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. திராவிடம் என்பது வெறும் ஐடியா மட்டுமல்ல.. அது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பல்வேறு கருத்தியலை கொண்டு கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி காந்தி மற்றும் நேருவின் கொள்கைகளை பின்பற்றக் கூடியது. இடதுசாரிகள் பொருளாதார சுதந்திரத்தை வலியுறுத்துவார்கள்.
திராவிட கொள்கை பெரியார் மற்றும் அண்ணாவை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் 18 வயது இளம் வாக்காளர்கள் திராவிட கொள்கைகள் பக்கம் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்தக் கொள்கைகள் பக்கமும் வரவில்லை என்று நினைக்கிறேன். அவர்களின் தந்தை, அம்மா, மூத்தவர்கள் ஏதேனும் ஒரு கொள்கையை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பார்கள்.
நிச்சயமாக இடதுசாரிகள், திராவிட தலைவர்கள் மத்தியில் இதுகுறித்த கவலை இருப்பது உண்மை தான். இளம் வாக்காளர்களிடம் திராவிட கருத்தியலை கொண்டு சேர்க்க தவறிவிட்டோம் என்று கவலை கொள்கிறோம். ஆனால் அந்த இடைவெளியை சரி செய்ய பணிகள் நடந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கு திராவிட கருத்தியல் கொண்டு சேர்க்க தயாராகிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!












Click it and Unblock the Notifications