விஜய்ன்னாலே திமுகவுக்கு கிலி? தவெக மன்னராட்சி தந்திரம்.. மிச்சம் 6 நாள் என்ன பண்றாங்க? பிரபலம் நறுக்
சென்னை: சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. அந்தவகையில், தவெக தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் இன்று பிரசாரம் செய்கிறார். அண்ணா, எம்ஜிஆரை மட்டுமே வைத்து விஜய் அரசியல் பேசிவருவதாக சீமான் நேற்றைய தினம் விமர்சித்திருந்த நிலையில், இன்றைய பிரச்சாரங்களில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இந்நிலையில், விஜய் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் வரஉள்ளது.. இதற்காக தமிழக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.. இதில் தவெக இந்த முறை போட்டியிட போகிறது.. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கவனம் விஜய் மீது திரும்பி வருகிறது.. இதனால் எதிர்க்கட்சிகள் விஜய் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

அந்தவகையில் நேற்றுகூட நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன.
இரண்டு சனியன்கள்
விஜய் பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.. இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்.ஜி.ரை வைத்திருக்கிறார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?. இது ஒரு சனியன், அது ஒரு சனியன் இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார்
அதிமுகவிடமிருந்து 2 இட்லி, திமுகவிடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்? மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. எழுதி தந்ததைகூட ஒழுங்காக படிக்க முடியவில்லை" என்றெல்லாம் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி இதுவரை 2 வாரங்களில் 4 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துள்ளார் விஜய்.. ஆனால் இனி வரப்போகும் 7 மாதத்துக்கும் தன்னை தாக்குப்பிடிக்கணுமே? ஏனென்றால், தேர்தல் நெருங்க நெருங்க, டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிமுக, திமுக என்றுதான் தமிழக அரசியல் களம் உருமாறி கொண்டிருக்கும்..
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சனைகள் குறித்து, சனிக்கிழமைகளில் விஜய் பேசிவிட்டு போகிறார்.. மற்ற 6 நாளும் என்ன செய்கிறார்? அவரது கட்சிக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? என்று தெரியவில்லை.. விஜய் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றபிறகு, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை.
இன்று நாமக்கல், கரூர்
உதாரணத்துக்கு நாகப்பட்டினத்தில் விஜய், தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை சொன்னார்.. ஆனால் அந்த குற்றச்சாட்டு எல்லாம் உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களை அந்த மாவட்ட தவெக நிர்வாகிகள்தானே நிரூபிக்க வேண்டும்? விஜய் பேசி முடித்து சென்றதுமே, அந்தந்த மாவட்ட பிரச்சனைகளை பேசி, அது தொடர்பான தொடர் போராட்டங்களை தவெகவினர் முன்னெடுக்க வேண்டும்.. களநிலவரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று நாமக்கல், கரூரில் விஜய் பேசப்போகிறார் என்றால், அவர் பேசிவிட்டு சென்றபோது, அந்த மாவட்டங்களில் தவெக நடத்தும் அரசியல் என்ன என்பதுதான் முக்கியம்.. விஜய் மட்டுமே ஒரு கட்சியில் பேசி வருவது அரசியல் அல்ல.. ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும்.
மன்னராட்சி - ஒரு நபர் கட்சி
விஜய் என்ற ஒரு தலைவரை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது.. தவெகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் அவசியம். மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டத்தை நடத்த அனுமதி கேட்டால் அரசு தர மறுக்கலாம்.. அப்படி தர மறுத்தால் சோஷியல் மீடியா மூலமும் மக்கள் பிரச்சனையை கொண்டு செல்லலாம். இதுபோல தொடர் நடவடிக்கை விஜய் கட்சிக்கு அவசியம்.
அன்று சோஷியல் மீடியா இல்லாத காலகட்டத்தில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பலவிதமான போராட்டங்களை செய்துதான் முன்னுக்கு வந்தது. இன்று சோஷியல் மீடியா வளர்ச்சியுள்ள இன்றைய காலத்தில் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.. எனவே விஜய்யின் வெற்றி என்பது எளிது கிடையாது.. வாரம் ஒருமுறை அரசியல் நடத்துவதைவிட, 365 நாளும் அரசியல் அவசியம்.
தவெக தவறை சரி செய்து கொள்ளுமா
விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது.. விஜய் பேசினால், அவரது ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனிக்கிறது.. அதில் சரிசெய்யக்கூடிய பிரச்சனைகளையும் அரசு உடனடியாக சரி செய்கிறது.. தன்னுடைய தவறை திருத்தி, உடனே திமுக அரசு சரிசெய்து கொள்வது மிகவும் நல்ல விஷயம்தான்.
ஆனால், திமுக பயப்படுகிறது என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து விஜய்யால் அரசியல் செய்ய முடியாது.. அவரது கட்சி மன்னாராட்சி போல உள்ளது.. ஒரு நபர் எப்படி கட்சியை நடத்த முடியும்? திமுக தன்னுடைய தவறை சரிசெய்து கொள்வதுபோல, தவெக தன்னை திருத்தி கொள்ளுமா? மீடியாவிடமே இதுவரை விஜய் பேசவில்லையே? அப்படி பேசியிருந்தால், நாகப்பட்டினத்தில் உரையாற்றும்போது, விவரப்பிழை அவருக்கு வந்திருக்காது,.
விஜயகாந்த்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன்
அல்லது விஜயகாந்த்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்கள் உடனிருந்து வழிநடத்தியதைபோல, சீனியர்களும் விஜய் கட்சியில் யாரும் இல்லையே?
இன்னமும் சினிமா ஹீரோ மனநிலைமையில், யாரையும் கிட்ட நெருங்க விடாமல், சுற்றிலும் பவுன்சர்களை வைத்து கொண்டால் எப்படி? நாகப்பட்டினம் போல இன்னும் 2 , 3 கூட்டங்களில் விவரப்பிழையுடன் பேசினால், விஜய் மீதான நம்பகத்தன்மை அதலபாதாளத்துக்கு போய்விடும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல மேடைகளில் விவர பிழையுடன் விஜய் பேசினாலும், ஏன் இவ்வளவு கூட்டம் கூடுது? எனவே ஆட்சியாளர்கள் கவலைப்பட வேண்டியது விவரப்பிழைகளை கிடையாது, அந்த கூட்டத்தை பற்றிதான் கவலைப்பட வேண்டும். விஜய்க்காக வருபவர்கள் எல்லாருமே ரசிகர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இப்படி சொல்லி சொல்லி, தங்களை தாங்களே திமுக ஏமாற்றி கொள்கிறது.. ஆட்சியாளர்கள் மீதுள்ள அதிருப்திதான், பலரை விஜய்யிடம் கொண்டு போய் நிறுத்துகிறது.. அதேபோல விவரப்பிழைகளை வைத்து, ஒரு கட்சி தலைவரை எடை போடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
-
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications