சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரி குறைப்பு கேட்டு முறையிடுவது மக்களின் உரிமை.. விஜய்க்கு ஆதரவாக எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எல்லா வரியையும் கட்டிய பின்பும் Vijay-க்கு அபராதம் ஏன்? என்ன நடந்தது ?

    நடிகர் விஜய் 2012ல் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தார். நுழைவு வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நடிகர் விஜய் ஏற்கனவே கட்டிவிட்ட நிலையில், நுழைவு வரி விதிப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

    டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்புடிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு

    இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. அதோடு நடிகர் விஜய்க்கும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

    அபராதம்

    அபராதம்

    நடிகர் விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் வரி விலக்கு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தவறான உதாரணம் என நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை ஹைகோர்ட் நேற்று கண்டிப்பு காட்டியது. நடிகர் விஜய்க்கு இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    பேட்டி

    பேட்டி

    செய்தியாளர்களுக்கு எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்டு நீதிமன்றத்தை நாட யாருக்கும் உரிமை இருக்கிறது. வரி குறைப்பு கேட்போரை நடிகர் என பார்ப்பது தவறு. அவர்களின் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் போது அதை விமர்சனம் செய்ய கூடாது.

    யூனியன்

    யூனியன்

    மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. union என்பதன் தமிழாக்கம்தான் ஒன்றிய அரசு.union minister என்றுதான் ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதேபோல் யூனியன் பட்ஜெட் என்றுதான் அழைப்பார்கள். இதனால் தமிழ்நாடு அரசும் அப்படி அழைப்பதில் தவறு இல்லை.

    கொங்குநாடு

    கொங்குநாடு

    கொங்குநாடு கோரிக்கையை எப்போதும் ஆதரிக்க முடியாது. தமிழ்நாட்டில் அதற்கு இடமில்லை. கொங்குநாடு என்று தனி மாநிலமாக பிரிப்பதற்கு இங்கு இப்போது யாரும் கோரிக்கை வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை எதிர்க்கும், என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Vijay Entry tax controversy: MP Karthi Chidambaram comes in support of the actor after MHC fine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X