ஈரோடு விஜய் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்..’ஜெர்க்' ஆன செங்கோட்டையன்! கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: ஈரோடு பவளத்தான் பாளையத்தில் செய்தியாளர்களுக்கு செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது தவெக கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூட்டத்தை பற்றி சொல்லக்கூடாது.. வம்புல மாட்றீங்க.. என்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு, 10 ஆயிரம் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என அனுமதி கேட்டு இருக்கிறோம் என்றார்.
தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார். காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மட்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய விஜய், புதுவையில் முதல் முறையாக கடந்த வாரம் பிரசாரம் செய்தார்.

ஈரோடு விஜய் கூட்டத்துக்கு அனுமதி
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விஜய் மீண்டும் முழு வீச்சில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். சேலத்தில் இருந்து விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்ட நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
தவெகவில் செங்கோட்டையன் இணைந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் நடைபெறும் முதல் மக்கள் சந்திப்பு கூட்டம் என்பதால், இந்த கூட்டம் தவெகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் நேற்று அனுமதி அளித்தார்.
கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்?
த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய வைப்புத்தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த அறநிலையத்துறை கோரியிருந்தது. இந்த தொகையை செலுத்தியதையடுத்து, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விஜய் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, நேற்று ஈரோடு பவளத்தான் பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையனிடம் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூட்டத்தை பற்றி சொல்லக்கூடாது.. வம்புல மாட்றீங்க.. என்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு, 10 ஆயிரம் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என அனுமதி கேட்டு இருக்கிறோம் என்றார்.
விஜய் வருவதற்கு தனி வழி
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "பொதுக்கூட்ட மைதானத்தில், ஆம்புலன்ஸ், சிசிடிவி கேமரா, குடிநீர், டாய்லட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் வருவதற்காக பேரிகாடுகள் அமைத்து தனி வழி ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டு இருக்கும் நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் 2 மணி நேரம் அதாவது அன்று பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
முழு வீச்சில் ஏற்பாடுகள்
கரூர் சாலை வலம், புதுச்சேரி மக்கள் சந்திப்புக்கு பிறகு ஈரோட்டில் விஜய் கால் வைக்கிறார். த.வெ.க.வுக்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது. த.வெ.க.வுக்கு மக்கள் சக்தி இருக்கிறது. மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார்" என்றார்.
விஜய் பிரசாரத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களுக்காக கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணியில் தவெக நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications