Vijay Erode Speech: "நாங்க என்ன வாயிலேயே வடை சுட DMKவா? TVKடா..” - ஈரோட்டில் ஆக்ரோஷமாகப் பேசிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு பெருந்துறை அருகே இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், "நாங்க என்ன வாயிலேயே வடை சுடுவதற்கு DMKவா? TVKடா.." என ஆக்ரோஷமாகப் பேசி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்றுள்ளது. இதையொட்டி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த விஜய் அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கார் மூலம் வந்தடைந்தார். இதையடுத்து, பிரச்சார வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பேசினார் விஜய்.

tvk vijay erode

தவெக தலைவர் விஜய் பேசுகையில், "எனக்கும், தமிழக மக்களுக்குமான உறவு என்பது கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறது. என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை தேடி வந்திருக்கிறேன். அவர்கள் என் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டார்கள்.

பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தைரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க..

இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜய்யை.. இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்ட ஒரே தலைவர் பெரியார். அவர்தான் நம்முடைய கொள்கை தலைவர். அப்போ அண்ணா, எம்ஜிஆர் யார் என்று கேட்கலாம்? பெரியார் அவர்களிடம் இருந்து கொள்கையை எடுத்துக்கொண்டோம். அண்ணா, எம்ஜிஆர் அவர்களிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டுள்ளோம். அண்ணா, எம்ஜிஆர் அவர்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. எங்களுக்கு மட்டுமே அவர்கள் சொந்தம் என்று அழக்கூடாது.

அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, அவர்களை பற்றி பேசுவதற்கு யாரும் தடை போட முடியாது. நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம். எங்களை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறும்போது, எங்களை பார்த்து உங்களுக்கு ஏன் இந்த பயம்? எங்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை? நாங்கள் எங்கே சென்றால் உங்களுக்கு என்ன? எங்களை கண்டு உங்களுக்கு ஏன் இந்த பயம் வருகிறது.

எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுத்தான் களத்திற்கே வந்திருக்கிறோம். சும்மா களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கப்போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் அசந்தால் மணல், மலைகள் காணாமல் போனது மாதிரி செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்கள் பணத்தில் மக்களுக்காகச் செய்வதை இலவசம் என ஏன் சொல்கிறீர்கள்.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன.. கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒண்ணு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான்.

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான். 24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள்.நாங்க என்ன வாயிலேயே வடை சுடுவதற்கு DMKவா? TVKடா.." என ஆக்ரோஷமாகப் பேசினார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+