"கேட் கீப்பர்" வார்த்தையையே காணோமே.. ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு விஜய் இரங்கல்!
சென்னை: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் பதிவில் விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ள விஜய், கேட்கீப்பரின் தவறுகள் குறித்து பேசாதது விவாதமாகி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பராக பணியாற்றிய பங்கஜ் சர்மா என்பவரின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரயில் வந்த போது, பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடவே இல்லை என்று தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சங்கர், காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

சிக்னலுடன் இணைக்கப்படாதது ஏன்?
அதேபோல் ரயில் விபத்து நடந்த போதும் கூட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா வெளியில் வந்து பார்க்கவில்லை. அப்போது பொதுமக்கள் சென்று பார்த்த போது, அவர் தூங்கி கொண்டிருந்துள்ளார். ரயில்வே கிராசிங்கில் கேட் கீப்பரின் சிக்னல் இல்லாமல் எப்படி ரயில் இயக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் ஏன் முக்கியமான லெவல் கிராசிங் சிக்னலுடன் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
இன்னொரு பக்கம் தெற்கு ரயில்வே சார்பாக, முக்கியமான லெவல் கிராசிங் என்பதால் சுரங்க பாதை அமைக்க முயற்சித்தோம். ஆனால் ஒரு வருடமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே தரப்பில் விபத்திற்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்று ஒப்புக் கொண்டுள்ளது.
விஜய் இரங்கல்
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரங்கப் பாதை அமைக்காதது ஏன்?
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
புதிய விவாதம்
எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். விஜயின் இந்த இரங்கல் பதிவு கேட் கீப்பர் என்ற வார்த்தையே இல்லாதது விவாதமாகி இருக்கிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications