விஜய் பவுன்சர்கள் மீது தவெக தொண்டர் புகார்.. நடிகர் அல்லு அர்ஜூன் போல ஆக்ஷன் பாய்கிறதா?
சென்னை: மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது, ரேம்ப் வாக் சென்ற விஜய்யை பார்க்க சென்ற தன்னை விஜய்யின் பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே போட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தவெக தொண்டர் சரத்குமார் என்பவர் தனது தாயுடன் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
விஜய் மாநாட்டின் போது, தொண்டர்கள் சிலர் கம்பியை தாண்டி சென்றனர். அப்போது விஜய்யை நெருங்க விடாமல் அவரது பவுன்சர்கள் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். சிலர் அப்படியே தொண்டர்களை கீழே தள்ளிவிட்டனர். இதை பார்த்த விஜய் ஏன்.. ஏன்.. என பவுன்சர்களை கண்டித்து, பொறுமையுடன் இருங்கள் என்றும் சைகை காட்டிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

விஜய்யின் மதுரை மாநாடு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2-வது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடந்தது. இந்த மாநாடானது மிக பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநில மாநாட்டை விட இந்த மாநாடு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
விக்கிரவாண்டி மாநாடு போலவே மதுரை மாநாட்டிலும் விஜய்யின் பந்தலில் இருந்து ரேம்ப் வாக் செய்யும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு இந்த மேடையானது அமைக்கப்பட்டு இருந்தது. விக்கிரவாண்டி மாநாட்டிலும் ரேம்ப் வாக் செய்த விஜய் இருபுறமும் சூழ்ந்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். அப்போது தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டுகளை தோளில் எடுத்து அணிந்தபடி சென்றார்.
விஜய்யை நெருங்க விடாமல் தடுத்தனர்
இதேபோன்றே மதுரை மாநாட்டிலும் விஜய் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்காக இந்த ரேம்ப் வாக் மேடையானது போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை தொண்டர்கள் அந்த ரேம்ப் வாக்கில் ஏறிவிடக்கூடாது என்பதற்காக மாநாடு தொடங்கும் முன்பேர் ரேம்ப் வாக்கின் இருபுறமும் கிரீஸ் தடவப்பட்டது. இருபுறமும் 10 அடி உயரத்துக்கு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஏறி தொண்டர்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அதில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது.
எனினும் மாநாடு தொடங்கியதும், விஜய் வழக்கம்போல் ரேம்ப் வாக் வர இந்த நேரத்திலேயே தொண்டர்கள் அந்த கிரீஸை தொடைத்துவிட்டு ரேம்ப் வாக்கில் ஏறத் தொடங்கினர். விஜய் ரேம்ப் வாக் செய்துகொண்டிருந்தபோதே தொண்டர்களும் ஏறிவிட்டனர். அவர்கள் விஜய்யை நோக்கி ஓடி வந்து கை குலுக்கினர். சிலர் கட்டி பிடித்தனர். நாலாபுறமும் விஜய்யை சூழ்ந்துகொண்டு அவரை நெருங்கி வந்ததால் விஜய்யின் பவுன்சர்கள் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.
நடவடிக்கை எடுக்க கோரி புகார்
ஒவ்வொரு பவுன்சர்களும் சுமார் 2 பேரை அப்படியே அலேக்காக பிடித்து கீழே இறக்கி விட்டனர். ஒரு சில பவுன்சர்கள் தொண்டர்களை அப்படியே தூக்கி கீழே தள்ளிவிடுவது போலவும் சில வீடியோ காட்சிகள் பரவின. மனசாட்சி இல்லாமல் விஜய்யின் பவுன்சர்கள் கீழே தூக்கி போட்டதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் விஜய் ரசிகர் ஒருவர், ரேம்ப்வாக்கில் விஜய்யை சந்திக்க சென்றபோது அவரது ரசிகர்கள் தூக்கி கீழே போட்டதாக புகார் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தொண்டராக இருந்து வருகிறார். இவர் மதுரையில் நடந்த தவெக மாநாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது விஜய்யை பார்ப்பதற்காக ரேம்ப் வாக்கில் ஏறி இருக்கிறார். அப்போது விஜய்யின் பவுன்சர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி போட்டதாகவும், விஜய்யின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புஷ்பா பட அல்லு அர்ஜூன் போல
ஏற்கனவே திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திலும் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பட ரிலீஸின் போது, ஐதரபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு அல்லு அர்ஜூன் வருகை தந்தார். அவரைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அல்லு அர்ஜூனும் அவரது பாதுகாப்பு குழுவும் திடீரென திரையரங்கில் நுழைந்ததால், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதில் ஏற்பட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு, மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105, 118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போலீசார், "நடிகர் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தரப்படாததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை. இதுவே கூட்ட நெரிசலுக்கு காரணம்" என்று தெரிவிக்கப்பட்டது.
விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
எனவே, போதிய முன்னறிவிப்பு இன்றி அல்லூ அர்ஜூன் திரையரங்கம் வந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால், தவெக மாநாட்டில் பவுன்சர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. எனினும், அல்லு அர்ஜுன் சம்பவத்தில் அவர் நேரடியாக கூட்டத்தை தூண்டியவர் எனக் கருதி கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் அதுபோன்ற விஷயங்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications