Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் போனாலும் உயிர் கொடுத்த விஜய் ரசிகர்..மறைந்தாலும் இனி உன் பெயர் மறையாது.. நீங்களே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகரின் கண்கள் 'தளபதி விஜய் விழியகம்' மூலம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தும் விஜய் ரசிகர் செய்த இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பு மட்டுமல்லாது அவ்வப்போது இவர் பேசும் சில அரசியல் கருத்துக்களாலும் விஜய் அதிகமாக அறியப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா மற்றும் கர்நாடகா என 4 மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த ரசிகர்களை கொண்டு சில உதவிகளையும் பொதுமக்களுக்கு விஜய் செய்து வருகிறார்.

Vijay fan Karan, who died in an accident in Chengalpattu, donated his eye to the government hospital through the Thalapathy Vijay Vizhiyagam app

சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை நேரில் அழைத்த பாராட்டியிருந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனை தொடர்ந்து இரவு பாடசாலையும் தொடங்கப்பட்டது. சினிமா வட்டாரத்தில் இருக்கும் நபர்கள் கல்வி சார்ந்து இயங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். கல்வி துறை தவிர ரத்ததான முகாம்களை நடத்துவது, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளையும் தனது ரசிகர்கள் மூலம் அவர் செய்து வந்தார்.

அதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'தளபதி விஜய் விழியகம்' எனும் செயலியை தொடங்கினார். இந்த செயலில் ரசிகர்கள் தங்களது சுய விவரத்தை பதிவு செய்தால் அவர்கள் இறந்த பின்னர் அவர்களுடைய கண்கள் தளபதி விஜய் விழியகம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும். செயலி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ஏராளமானோர் அதனை டவுன்லோட் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து வைத்தனர். தற்போது வரை சுமார் 7,000 பேர் இதில் பதிவு செய்துள்ளனர்.

Vijay fan Karan, who died in an accident in Chengalpattu, donated his eye to the government hospital through the Thalapathy Vijay Vizhiyagam app

அப்படிதான் செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிளை தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் கரண் எனும் இளைஞரும் தன்னுடைய தகவல்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி கரண் எதிர்பாரத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்தான் அவர் தளபதி விஜய் விழியகம் செயலில் தன்னுடைய கண்களை தானம் செய்வதற்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.

பின்னர் ரசிகர் மன்றம் சார்பில் அவர்களுடைய குடும்பத்தினரை அணுகியபோது குடும்பத்தினர் கரணின் செயலை நினைத்து நெகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து கரணின் கண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தளபதி விஜய் விழியகம் செயலி மூலம் வழங்கப்படும் முதல் கண்தானம் இதுவாகும். இச்சம்பவம் விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழ வைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+