ஒரே மகளை ஐசியூவில் விட்டுவிட்டு! விஜய்யை பார்க்க பழனியிலிருந்து தஞ்சை வந்த பெண்! குவியும் கண்டனம்
சென்னை: என் ஒரே மகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதிலும், விஜய்யை பார்க்க பழனியில் இருந்து வந்திருப்பதாக பெண் ஒருவர் பூரிப்புடன் சொன்ன காட்சிகள் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், கடந்த முறை தஞ்சாவூருக்கு வந்த விஜய்யை பார்க்க முடியாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதாவது எங்கள் சொந்தக்காரரை பார்க்க முடியாமல் போனது போல் இருந்தது.

அவரை தற்போது செங்கிப்பட்டியில் பார்த்ததும் அழுகையே வந்துடுச்சி! எனக்கு இருப்பது ஒரே ஒரு மகள், அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை விட்டுவிட்டு நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக பழனியில் இருந்து வந்துள்ளேன் என அந்த பெண் தெரிவித்தார்.
விஜய்யின் தவெக கட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் இந்த பெண்ணை போல்தான் அதிர்ச்சிகரமாக பேசி வருகிறார்கள். கடந்த வேலூர் கூட்டத்திற்கு விஜய் வந்திருந்த போது ஒரு பெண், தனது கல்லூரியில் நடந்த செய்முறை தேர்வை கட் அடித்துவிட்டு விஜய்யை பார்க்க வந்ததாக கூறியிருந்தார்.
அது போல் இன்னொரு சிறுவன், தனது பெயர் சுறா என்றும், விஜய் ரசிகையான தனது தாய் சுறா படத்தை பார்த்த போது தான் பிறந்ததால் தனக்கு சுறா என்று பெயரிட்டதாக அந்த சிறுவன் தெரிவித்திருந்தார்.
அது போல் கணவரை விட எனக்கு விஜய்தான் பிடிக்கும் என்று ஒரு பெண்ணும், மனைவி தாய், தந்தையை விட எனக்கு விஜய்யண்ணாதான் மிகவும் பிடிக்கும் என்று ஒரு இளைஞரும் தெரிவித்திருந்தனர்.
அதிலும் ஈரோட்டில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தின் போது பெண் ஒருவர் தனது வீட்டில் 9 ஓட்டுக்கள் இருக்கின்றன. யாராவது விஜய்க்கு போடாவிட்டால் சோற்றில் விஷம் வச்சு கொன்றுவிடுவேன் என கூறி திகில் கிளப்பினார்.
இப்படியாக பலர் இருந்து வருகிறார்கள். இதனால் இவர்களை பலர் தற்குறிகள் என விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சங்கீதா- விஜய் விவாகரத்து விவகாரம் கோர்ட்டில் இருக்கும் நிலையில், பெண் ஒருவர், "எங்கள் விஜய்க்கு சங்கீதா போனால் என்ன நாங்கள் மனைவியாகவும் இருப்போம்" என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார்.
தஞ்சையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார். அதாவது "இந்த காலத்தில் சாதாரண வேலை செய்வோரே 2 பொண்டாட்டி வைத்திருக்கிறார்கள் (அந்த பெண் மிகவும் கொச்சையாக பேசினார்), விஜய் அண்ணா எத்தனை பேரை வைத்திருந்தால் சங்கீதாவுக்கு என்ன" என்ற ரீதியில் பேசியிருந்தார்.
இப்படியாக இளைஞர்கள், இளைஞிகள் என சிறிதும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை பேசி வருகிறார்கள். இதுபோல் எந்த கட்சியிலும் தொண்டர்கள் பேசியதில்லை. மேலும் விஜய்- சங்கீதா விவாகரத்து விவகாரம் அவர்களது தனிப்பட்ட விவகாரம் ஆகும்.
இதில் பலர் தலையிட்டு சங்கீதாவை அநாகரீகமான வார்த்தைகளால் பேசி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் பேசுவோரை விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
-
சங்கீதாவுக்கு ₹250 கோடி செட்டில்மென்ட் தர விஜய் சம்மதம்? 2 காரணம் இதுவே.. தீவிரமாகும் சமாதான பேச்சு? -
Vijay: விஜயால் பிரபல நடிகர் வீட்டுக்குள்ளேயே பஞ்சாயத்து.. சோசியல் மீடியாவில் வெடித்த வாக்குவாதம்! -
என் பாப்பாவைவிட எனக்கு விஜய்தான் பிடிக்கும்.. கைக்குழந்தையுடன் தஞ்சை வந்த பெண் சிலாகிப்பு! -
பனையூர் டூ பட்டினப்பாக்கம்.. புயலை கொண்டு வந்த சங்கீதா.. கேசுரீனா டிரைவ் பக்கமே போகாத விஜய்! -
சங்கீதாவின் உண்மையான முகமே இதுதான்! உதவி செய்தவருக்கு வைத்த ஆப்பு.. விஜயின் முன்னாள் உதவியாளர் ஓபன் -
கட்சிக்காரங்க என்னோட உறவுன்னு சொல்றீங்களே விஜய், அப்புறம் ஏன் கரூர்ல இருந்து காப்பாற்றாம ஓடுனீங்க? -
“ரெய்டு வந்தா டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” - விஜய் பேச்சு! -
உங்க வரலாற்றை நோண்டுனா என்ன ஆகும் தெரியுமா? கிட்னி திருட்டு.. விஜய்க்காக ஜூலியை அட்டாக் செய்த நடிகர் -
விஜய் மீட்டிங்கில் சிரித்த சங்கீதா.. சோஷியல் மீடியாவில் தெறிக்கும் போட்டோ! நீங்க அதை பாத்தீங்களா? -
நீங்க ரூல்ஸ போடுங்க.. நாங்க பழி மேல பழி போட்டு தடுக்குறோம்! திமுக - அதிமுக மீது விஜய் நேரடி அட்டாக்! -
நடிகையுடன் கனெக்சன்.. போட்டுடைத்த சங்கீதா! பரபர பஞ்சாயத்துக்கிடையே தஞ்சை வரும் விஜய்! பேசுவாரா? -
தேர்தலில் போட்டியிட்டு தோற்க நாங்க முட்டாளா - தவெக கூட்டணியில் இருந்த ஒரே கட்சியும் எஸ்கேப்












Click it and Unblock the Notifications