போலீஸ் ஆக்சன் தொடங்கியது.. வதந்தி போஸ்டுகளை டெலிட் செய்துவிட்டு.. ஓடிய தவெக இன்ஃப்ளூயன்சர்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு சார்பாக வீடியோ போட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு இன்ஃப்ளூயன்சர்கள் பலரும் அந்த வதந்தி போஸ்டுகளை, ரீல்ஸ்களை டெலிட் செய்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளனர். ஆனால் இதில் பலர் போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய 25 பேர் கைது செய்யப்பட உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்; எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஸ்டாலின் ஆக்சன்
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வரும் நபர்கள் மீது தமிழக அரசு ஆக்சன் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்க்கு ஆதரவாக தீவிரமாக PR அரசியல் செய்த வருகின்றனர். விஜயின் பெயரை கெடுக்க கூடாது.. அதை காப்பாற்ற வேண்டும் என்பதை முன்னிறுத்தி பல போஸ்டுகளை கோலிவுட் இன்ஃப்ளூயன்சர்கள், விமர்சகர்கள் போட்டு வருகின்றனர்.
விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் பலரும் கூட இதேபோல் இது அரசின் சதி என்று பொய்யாக வதந்திகளை பரப்பினார்கள். விஜய் இரங்கல் சொல்லவில்லை, நிர்வாகிகளை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்கவில்லை என்பதை எல்லாம் கேள்வி கேட்காமல்.. விஜய் பெயரை காக்க தீவிரமாக போஸ்ட் செய்தனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த பொய்யான வீடியோக்களை வெளியிட்ட பல இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. வேண்டுமென்று வதந்தியை பரப்பும் விதமாக பொய்யான செய்திகளை வெளியிட்ட, ரீல்ஸ்களை வெளியிட்ட நபர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
போலீஸ் ஆக்சன் எடுக்கும் என்று தெரிந்தவுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சார்பாக வீடியோ போட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு இன்ஃப்ளூயன்சர்கள் பலரும் அந்த வதந்தி போஸ்டுகளை, ரீல்ஸ்களை டெலிட் செய்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளனர். ஆனால் இதில் பலர் போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் போட்ட போஸ்டுகள் எல்லாம் பொய்யானது, வதந்திகளை பரப்ப கூடியது, கலவரத்தை தூண்ட கூடியது. இதையடுத்து போஸ்டுகளை டெலிட் செய்துவிட்டு பலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் என்னை மன்னித்துவிடுங்கள் என்று போஸ்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications