Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த பேரையும் பிடித்த விஜய் ஃபீவர்.. தமிழக அரசியலில் ஒரு புது பூகம்பம்.. ஓட்டு வருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகம் தொடங்கி 2 ஆண்டுகளே ஆன நிலையில், முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அவர் எடுத்த அதிரடி முடிவு, மற்ற கட்சிகளின் தூக்கத்தைக் கலைத்துள்ளது. தமிழக அரசியல் இன்று விஜயைச் சுற்றியே சுழல்கிறதோ என்ற சந்தேகம் இப்போது மெல்ல மெல்ல உண்மையாகி வருகிறது. அதுகுறித்து ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் நிலவி வருகிறது. ஒருபுறம் பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த கட்சிகள் கூட்டணி கணக்குகளுக்காகத் தவம் கிடக்க, மறுபுறம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாட்டுக்குத் தன் அரசியலைச் செய்து வருகிறார் விஜய்.

விஜயின் இந்த அரசியல் நகர்வு மிகவும் நுணுக்கமானது. குறிப்பாக, தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகும் "முதல் தலைமுறை வாக்காளர்களை" அவர் குறிவைப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

tvk

சிறுபான்மையினர் வாக்குகள்

அதைவிட முக்கியமாக, தமிழகத்தின் சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் கணிசமாகப் பிரிப்பார் என்று வரும் கருத்துக்கணிப்புகள் ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் தலைவலியைத் தந்துள்ளன. மற்ற கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்க, விஜய் எவ்வித சலனமும் இன்றித் தன் பாதையில் பயணிப்பது தான் இங்குள்ள மிகப்பெரிய 'அரசியல் முரண்'.

விஜய் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்தாலும், காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற தேசிய இயக்கங்கள் அவரை மையப்படுத்தியே தங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வது 'விஜய் ஃபீவர்' எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் பேரியக்கம் ஒருபுறம் திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், அக்கட்சியின் அடிமட்டத்தில் ஒரு 'விஜய் பாசம்' ஓடிக்கொண்டே இருக்கிறது.

செங்கோட்டையன், எடப்பாடி

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விஜயுடன் கைகோர்க்க விரும்பியதும், அதற்காகவே திமுக உடனான பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டதும் இப்போது ரகசியமல்ல. "உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் தான் இருக்கிறது" என்று விஜய் வீசிய ஒற்றை வசனம், காங்கிரஸ் மேலிடத்தை அதிரவைத்துள்ளது.

அதேபோல், அதிமுகவில் இருந்து விலகி விஜயுடன் இணைந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அதிமுகவின் அடித்தளத்தையே ஆட்டியுள்ளது. எடப்பாடி விஜயுடன் கூட்டணி வைக்கத் துடித்தார் என்ற செய்தி வெளியானதும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

பழைய அரசியல் வியூகம்

இவை அனைத்திற்கும் மேலாக, விஜய் எனும் பிம்பம் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. தனித்து நின்று அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அவரது துணிச்சல், இதுவரை திராவிடக் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட தேர்தல் ஃபார்முலாக்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது.

பழைய அரசியல் வியூகங்கள் எடுபடாத சூழலில், விஜய்க்கு எதிராக எத்தகைய ஆயுதத்தை எடுப்பது எனத் தெரியாமல் திணறும் எதிர்த்தரப்பினர், இப்போதே மே 4-ஆம் தேதியின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். ஆனால், மக்கள் மனநிலை யாருக்கு மகுடம் சூட்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நீடிக்கிறது. மே 4ம் தேதி வெளிவரப்போகும் தீர்ப்பு, இந்தத் தனிப் பாதையின் வெற்றியைச் சொல்லப்போகிறது..!!

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+