நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இதற்காக இன்று காலை அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் ரோடு ஷோவாக வந்த விஜய் பாலக்கரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோவாக வந்த விஜய், 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் சென்ற நிலையில் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 12 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அதுவரை கேரவனில் இருந்துவிட்டு அதன்பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். இதில் வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி வந்த விஜய்
தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த விஜய் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பாலக்கரை புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் குவிந்ததால் ரோடு ஷோவாக விஜய் சென்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் அலுவலர்கள் விஜய் கையெழுத்திட பேனா கொடுத்த போது அதனை வாங்கிய விஜய் பிறகு புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவிலேயே கையெழுத்திட்டார்.
அரை மணி நேரம் காத்திருந்த விஜய்
முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோவாக வந்த விஜய், 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் வந்தடைந்தார். ஆனால் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் அரை மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 12 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அதுவரை கேரவனில் இருந்துவிட்டு அதன்பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அவருக்கு காவல்துறை சார்பில் 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. முன்னதாக அங்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications