விஜய் படம் ரூ.300கோடி வசூலா? விளம்பரத்தால் விபரீதம்.. நூல் பிடித்து வந்த ஐடி! பல படங்களுக்கு சிக்கல்
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் குறித்த வசூல் விளம்பரம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அன்பு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

சிக்கியது எப்படி?
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஐடி ரெய்டு. டெல்லியிலிருந்து வந்த 350 அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையிட்டு உள்ளார்கள். வாட்ஸ் அப் உரையாடல்களை வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் பலரை பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்து தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியதற்கான காரணத்தை சினிமா மூத்த பத்திரிகையாளர் அந்தணன் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.

பிகில் வசூல்
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, "திரைப்படங்களின் வசூல் நிலவரங்கள் தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆயிரம் கோடி, 500 கோடி, 100 கோடி வசூல் என வெளியிடும் விளம்பரங்களும் இதற்கு ஒரு காரணம். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதன் வசூல் ரூ.300 கோடி என தயாரிப்பாளர் தரப்பில் விளம்பரம் செய்யப்பட்டதை வைத்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி இதுவரை வந்துள்ளனர்." என்றார்.












Click it and Unblock the Notifications