முதல் சம்பவமே அதிரடி தான்.. “சட்டம் ஒழுங்கில் நோ காம்ப்ரமைஸ்”.. முதலமைச்சர் விஜய் மேஜர் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சராக இன்று பதவியேற்ற விஜய் பதவியேற்ற உடனே தலைமைச் செயலகம் சென்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றதும், அரசு கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

Vijay First Review

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமை செயலகத்தில் ஒரு முக்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார், முதலமைச்சரின் செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு நிலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதையும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதையும் குறிக்கோளாக கொண்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எந்தவொரு புகாரும் தாமதமின்றி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், காவல்துறை விரைவான பதில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், சமூகத்தில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளும் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு சிக்கலாக மாறாமல் தடுக்கும் வகையில் முன்கூட்டியே கண்காணிப்பு முறை வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய், சட்டம் ஒழுங்கு தொடர்பாக தினசரி அடிப்படையில் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், இடையிடையே முக்கிய உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தொடர்ந்து நிர்வாக ரீதியான ஆலோசனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கு வலுப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த உயர்மட்ட ஆலோசனை அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து நேரடி கண்காணிப்பு முறை உருவாக்கப்படுவது நிர்வாகத்தில் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+