விஜய் எங்களுக்கு தம்பி! விஜயகாந்த் உடன் இருந்தது பலகால உறவு! தவெகவிற்கு கிரீன் சிக்னல் தந்த பிரேமலதா
சென்னை: நடிகர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி"அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு என கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டில் நேற்று பல விஷயங்களை பேசிய விஜய் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்தும் பேசினார். அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.

விஜயகாந்த் பற்றி விஜய் பேச்சு
என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா. தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன். அவர் வரவில்லை அதனால் நீங்கள் வர மாட்டீர்கள் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன்., என்று விஜய் பேசி இருந்தார்.
விஜய் பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
உள்ளம் தேடி இல்லம் நாடி என்னும் பிரச்சார பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். மேலும் கேப்டனின் ரத யாத்திரை, மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்னும் பெயர்களிலும் இந்த பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மாளிகை மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். முன்னதாக பண்ருட்டிக்கு வருகை தந்த அவருக்கு தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்களுடன் தேமுதிக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பண்ருட்டி தொகுதியை தேமுதிக வென்றது என்ற செய்தி உறுதியாக தர வேண்டும். கேப்டன் எத்தனையோ திட்டங்களை கூறினார். அந்த வகையில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மலட்டாற்றில் தென்பெண்ணை ஆற்றின் நீரை திருப்பி விடப்படும். திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் சுற்றுலா தலமாக மாற்றப்படும். விவசாயிகள் அனுமதி இன்றி என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டம் வந்தாலும் தேமுதிக மக்கள் பக்கம் நிற்கும். பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்படவில்லை பலா முந்திரிக்கு உரிய விலை தரவில்லை என்றார்...
விஜயகாந்த் - விஜய் உறவு
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில் விஜய் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு,கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது இந்த உறவு என்றார்.மேலும் தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என தெரிவித்த அவர், ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications