Vijay: ஆதவ் அர்ஜுனா எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை! தவெகவுக்கு திக் திக் திங்கள்கிழமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தவெக பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திட்டமிடல் சரியாக இல்லை என கருதிய விஜய், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாராம். அப்போது அவர்கள் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. அந்த ஆலோசனையில் அப்படி என்னதான் பேசினார்கள் என்பதை பார்க்கலாம்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த குடும்பத்தினருக்கு விஜய் இதுவரை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் விஜய் கடந்த சில நாட்களாக 41 பேரின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் ஆறுதல் சொன்னதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

vijay karur aadhav arjuna

விஜய் ஆறுதல் சொன்ன போது அவர் கண்ணீர் விட்டதாகவும் 41 பேரின் குடும்பத்தினரில் சிலர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த மாதம் 27ஆம் கரூர் சென்றதுடன் சரி, விஜய் எங்குமே செல்லாமல் நீலாங்கரை, பட்டினம்பாக்கம் இல்லத்தில் மாறி மாறி இருந்து வருகிறார். இதற்காகவே அவரை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகிறார்கள். சம்பவம் நடந்து 15 நாட்களாகியும் எங்கும் செல்லாமல் இருக்கிறாரே! இவர் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார் என்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெகவுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் விஜய் மீதும் தவெக மீதும் உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் கரூர் போலீஸார் விசாரணைக்கு தடை விதித்துவிட்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதன் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த தவெக, கரூர் சம்பவத்திற்கு பிறகு அமைதியானது. ஒவ்வொரு வழக்கிலும், "திட்டமிடல் சரியில்லாததால்தான் 41 பேர் உயிரிழந்தனர்" என தெரிவித்ததால் அந்த பாயிண்ட்டையே விஜய் கருதுகிறாராம். இதனால் அடுத்து பிரச்சாரம் எப்படி செய்வது என்பது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினாராம்.

அப்போது அவர்கள் "வழக்கம் போல் சனிக்கிழமைகளில் பிரச்சாரத்தை தொடரலாம்" என்றனராம். ஆனால் விஜய்யோ "உச்சநீதிமன்ற தீர்ப்பு வரட்டும். அது எப்படி வருகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து ஆலோசிப்போம்.

அதுவரை கட்சி தொடர்பான எந்த நிகழ்வுகளும் இப்போதைக்கு வேண்டாம்" என கூறிவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே விஜய் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+