Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருங்கால தமிழ்நாடு சிஎம்.. பட்டென பேசிய மாணவி! சட்டென மைக்கை பிடுங்கிய விஜய்.. என்ன சொன்னாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக அழைத்து பரிசு வழங்கி வருகிறார். இன்று இரண்டாவது கட்டமாக மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் மேடையில் பேசிய ஒரு மாணவி விஜயை வருங்கால முதலமைச்சர் என குறிப்பிட்டார். அப்போது மைக்கை அவரிடம் இருந்து வாங்கிய விஜய், 'நான் சொல்லிக் கூட்டிட்டு வரல' என கூற அரங்கில் கரவொலி எழுந்தது.

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து நேரில் சந்தித்து பரிசு வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டும் மாணவர்கள் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது.

Actor Vijay Plus 2 TVK

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்கள் சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்பினர். கடந்த 30ஆம் தேதி அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து விஜய் விருந்து வைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக மாமல்லபுரம் 4.5 விடுதியில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர், மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி வருகிறார். மாணவர்களுடன் பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம்போல் அவர்களுக்கு விருந்தளித்து அவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவ மாணவிகள் விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்பதற்காகவே தாங்கள் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்ததாக கூறிய போது கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய சில மாணவிகள் வாழ்க்கைக்காக படித்தோம் என்பதை விட தளபதிக்காக படித்தோம் என்பதுதான் உண்மை, அடுத்த ஆண்டு முதலமைச்சராக விஜயின் கையால் பரிசு பெறுவோம் என பேசினர்.

அந்த வகையில் பேசிய ஒரு மாணவி 'வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' என பேசினார். அப்போது சட்டென அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய விஜய் இப்படி பேச வேண்டும் என நான் சொல்லி கூட்டிட்டு வரல என சிரித்தபடி கூறினார். அப்போதும் அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது. அதற்குப் பிறகும் சில மாணவிகள் வருங்கால முதலமைச்சர் அடுத்த தேர்தலில் நீங்கள் தான் முதலமைச்சர் என பேசினர்.

அப்போது விஜய் மாணவிகள் பேசுவதற்கு முன்னதாகவே மைக்கை வாங்கி இனிமேல் வருங்கால முதலமைச்சர் அப்படி என பேச வேண்டாம். தவறாக எடுத்துக் கொள்வார்கள். எனக் கூறிய நிலையில் அடுத்து அனைவரும் தளபதி விஜய் என பேசினர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+