விஜய் ரொம்ப நல்ல மனுஷன்.. கண்டிப்பா ஜெயிக்கணும்! அவர்ட்ட ஒன்னு சொல்லனும்.. திருப்பாச்சி ‘தங்கை’ வீடியோ
சென்னை: விஜய் கேமரா முன்புதான் நடிப்பார்.. மக்கள் முன்னாடி நடிக்க மாட்டார் என்று கூறியுள்ள திருப்பாச்சி பட நடிகை மல்லிகா, கலிகாலத்தில் நல்லது செய்யனும்னு நினைச்சால் கூட நிறைய தப்புகள், கெட்ட விஷயங்கள் வந்துடும். கடைசில அவர் தான் ஜெயிப்பார். கண்டிப்பாக விஜய்தான் ஜெயிப்பார். அது எனக்கு தெரியும். விஜய் சார்.. நீங்க ரொம்ப நல்ல மனுஷன் என்று கூறி தனது இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக 'கருப்பு' எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் மல்லிகா. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இவர், தமிழில் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்தில் 'கமலா' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணினாலே
திருப்பாச்சி படத்தில் விஜய்யின் தங்கையாக வாழ்ந்து இருப்பார் எனும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது சினிமாக்களில் அதிகம் தலை காட்டாத மல்லிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் விஜய் குறித்து பேசியதாவது:- "எல்லோருக்கும் வணக்கம்! நான் மல்லிகா பேசுகிறேன். இன்ஸ்டாகிராமில் சமீபத்தில்தான் நான் கொஞ்சம் ஆக்டிவாக இருக்கிறேன். இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணினாலே விஜய் ரீல்ஸ்தான் வந்து கொண்டிருக்கிறது. நிறைய பேர் சப்போர்ட் பண்ணுறாங்க. எனக்கும் விஜய் சார் பற்றி இரண்டு வார்த்தை பேசணும்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
திருப்பாச்சி சூட்டிங் பண்ணும்போது ரொம்ப பாவமான கேரக்டர். சூட் முடிச்சிட்டு சேரில் போய் உட்காரும் போது ரொம்ப எல்லாம் பேச மாட்டார். பேசினால் பேசுவார், ஆனால் ரொம்ப எல்லாம் பேச மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஆள் எப்படி இந்த மாதிரி கட்சி ஆரம்பிக்கப் போறாங்க, எப்படி எல்லாரிடமும் பேசப் போறாங்கன்னு யோசிச்சேன்.
ஆனால், அவர் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் கிட்ட பேசும் போது ரொம்ப மாற்றம் இருக்கு அவர்கிட்ட ரொம்ப மாற்றம்! அவர் உள்ளுக்குள் இருந்து பேசும் போதே தெரிகிறது. ரொம்ப ஸ்ட்ராங் ஆன நபர் அவர். அந்த மாதிரி பேசுறது பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
மக்கள் முன்னாடி நடிக்க மாட்டார்
ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல வேண்டும் மக்களிடம்.. விஜய் சார் மக்கள் முன்னாடி கண்டிப்பாக நடிக்க மாட்டாங்க. 'ஆக்ஷன்' சொன்னால், கேமரா முன்னாடி இருந்தால் மட்டும்தான் விஜய் நடிப்பார். மக்கள் முன்னாடி கண்டிப்பா நடிக்க மாட்டார். அந்த மாதிரி ஒரு மனிதர் உங்களுக்காக வந்து இருக்காங்க, உங்களுக்கு நல்லது செய்யனும்னு வந்து இருக்காங்க.
விஜய் தான் ஜெயிப்பார்
எனவே, தமிழ்நாடு மக்கள் ரொம்ப கொடுத்து வைத்திருக்கணும். இந்த மாதிரி ஒரு நடிகர் கிடைத்ததுக்கு. இந்த கலிகாலத்தில் நல்லது செய்யனும்னு நினைத்தாலே நிறைய தப்புகள், கெட்ட விஷயங்கள் வந்துடும். நல்லது செய்யுறதுக்கு ஒரு ஆள் வந்து இருக்குன்னா, அவருக்கு நிறைய தப்பான விஷயங்கள் வந்துட்டே இருக்கும். ஆனால் கடைசியில் அவர் தான் ஜெயிப்பார். கண்டிப்பாக விஜய்தான் ஜெயிப்பார்.. அது எனக்கு தெரியும்.
உங்களை நீங்க பார்த்துக்கோங்க
இன்னொரு விஷயம் நான் விஜய்யிடம் சொல்லணும். விஜய் சார், நீங்க ரொம்ப நல்ல மனுஷனா இருக்கீங்க. நீங்க உங்களை பார்த்துக்கோங்க. ஏனெனில் கூட்டத்திலேயே வந்து சதி செய்வதற்கு நிறைய பேர் வருவாங்க.
அதனால் நீங்க உங்களை நீங்க பார்த்துக்கோங்க. நீங்க நல்லா இருந்தா, உங்களை நம்பி வந்த எல்லாருக்கும் நல்லது செய்வீங்க என்ற நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு ஆரோக்கியம், ஆயுள் கிடைக்க பகவானிடம் வேண்டுகிறேன்," என மல்லிகா கூறியுள்ளார்.
-
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் எப்போது தொடக்கம் தெரியுமா? இதோ வந்தாச்சு தகவல் -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications