என் ரத்தம்! எதற்கு பயப்படனும்.. பேட்டியே கொடுக்காதது ஏன்? கருணாநிதி பற்றியும் எஸ்ஏசி பரபர பேச்சு
சென்னை: ஒருமுறைதான் வாழ போகிறோம். எதற்காக பயப்பட வேண்டும். 2 வருடம் முன்பு வரை நான் எந்த கட்சியிலும் கிடையாது ஆனால் நான் இப்போது தவெகவில் இருக்கிறேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அவர் பேசியதன் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

நான் இரண்டு வருஷத்திற்கு முன்னாடி வரை எந்த கட்சியிலும் இல்லை.. இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறேன். எனக்கு அண்ணாவை பிடிக்கும். பெரியாரை பிடிக்கும். கலைஞர் கருணாநிதியை பிடிக்கும். 1987 ஆம் ஆண்டு கலைஞரை கைது செய்து அழைத்து செல்லும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஏனென்றால் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அண்ணன்.. அண்ணன் என்று அழைப்பேன்.. அவரை கைது செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது 3வது நாள் கலைஞரின் நீதிக்கு தண்டனை என நான் கதை எழுதுகிறேன்..
எம்.ஜிஆர் என்ற பவர்ஃபுல் பவர் ஆண்டுக்கொண்டு இருக்கிறது. அப்போது கலைஞர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். நான் கலைஞரின் நீதிக்கு தண்டனை என்ற படத்தை ரிலீஸ் செய்கிறேன். தந்தியில் ஃபுல் பக்க விளம்பரம்.. அதிலே ராதிகாவை கூண்டில் நிற்க வைத்து, கலைஞரை ஜெயிலுக்குள் போட்டு கலைஞரின் நீதிக்கு தண்டனை என விளம்பரம் வெளியாகி இருந்தது.
சிஎம் என்னை கூப்பிட்டு விடுகிறார். எனக்கு எப்படி இருக்கும். தப்பு நடக்குதய்யா.. அதை நான் பார்க்கிறேன்.. அதனை நான் சினிமாவில் சொல்றேன்.. எங்கிட்ட இருக்கும் சினிமா எனும் ஆயுதத்தை பயன்படுத்துறேன்.. என்ன நடந்தாலும் பரவாயில்ல.. இப்போ எல்லா அப்படி எடுக்க முடியாது.. எடுத்தால் படம் ரீலீஸ் ஆகாது.. அப்படியில்லை.. நாமே ரிலீஸ் ஆக மாட்டோம்..
அதற்கு தான் நான் மைக்கையே பிடிக்கிறது இல்ல.. எந்த விழாக்களுக்கும் போகிறது இல்ல.. இண்டெர்வியூக்கள் கொடுக்கிறது இல்ல.. ஏனென்றால் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அது பாட்டுக்க வந்துகொண்டே இருக்கும். சினிமாவிலும் அப்படித்தான்.. நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான்..
ஒரு தடவை தான் பொறக்குறோம்.. ஒரு தடவை தான் இறக்க போகிறோம்.. இதற்கு இடையில் நாம் அப்படி வாழ்ந்துவிட்டு போயிடலாமே.. எதற்கு தினம் தினம் பயப்பட வேண்டும்.. ஒரு தடவை தான் சாகப்போறோம்.. என் பிளட்(ரத்தம்) தான் இப்போ.. ஜீன் தானே.. நான் மனதில் தோன்றியதை பேசிவிடுவேன்.. அதனால் தான் அதிகம் பேச மாட்டேன்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications