51 வயசாகிவிட்டது.. இப்பவுமா இப்படி? புகைச்சலில் விஜய்.. கடுப்பான தவெக தலைகள்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் எடுக்கும் முடிவுகளை முழுக்க முழுக்க ஜான் ஆரோக்கியசாமியை நம்பி எடுப்பதால் இரண்டாம் கட்ட தலைகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகிவிட்டனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார்.

இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கரூர் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது பொதுச்செயலாளர் கடமை. ஆனால் அதே புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரங்களை எதிர்கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார். அவரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த மனுவிற்கு எதிராக மேல்முறையீடு இன்னும் செய்யப்படவில்லை.
கரூர் சம்பவம் நடந்த அன்று திருச்சி பைபாஸில் அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் போனை ஆன் செய்யவில்லை. அப்படியே தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்து அவர் ஏற்காடு சென்றதாக நிறைய தகவல்கள் கூறுகின்றன. அங்கே ரிசார்ட் ஒன்றில் அவர் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது.அதன்பின் அவர் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டிற்கு ஓடிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. அவர் வங்கக்கடலில் கப்பல் ஒன்றில் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. இன்னொரு பக்கம் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளார். இது போக ராஜ் மோகன், ஜான் ஆரோக்கியசாமி, அருண் ஆகிய தலைவர்களும் தலைமறைவாகி உள்ளார். லயோலா மணி சில போஸ்டுகளை போட்டாலும் அதை டெலிட் செய்து கட்சிக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
கடுப்பான விஜய்
இதனால் விஜய் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறாராம். எனக்கு பிரச்சனை என்ற நேரத்தில் இவர்கள் யாரும் என்னுடன் இல்லை. எனக்கு தேவை என்ற நேரத்தில் இவர்கள் உடன் இருக்கவில்லை. இப்போது பிரச்சனைகளை தனியாக எதிர்கொள்கிறேன். பலரும் எனக்கு எதிராக திரும்பிவிட்டனர் என்று விஜய் கடுப்பில் இருக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் விஜய் மீதும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதில்.. விஜய்க்கு 51 வயதாகிவிட்டது. அவர் கொஞ்சமாவது சுயமாக முடிவு எடுக்கலாம். கொஞ்சமாவது யோசித்து முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அவர் சுயமாக முடிவு எடுப்பது இல்லை. இந்த வயதில் கூட விஜய் அருண் சொல்வதை கேட்டே முடிவு எடுக்கிறார்.
கரூரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கக் வேண்டாம் என்று சொன்னது ஜான் ஆரோக்கியசாமி. அவர்களை நீலாங்கரை வரச்சொல்லலாம் என்று ஐடியா கொடுத்தது ஜான் ஆரோக்கியசாமி. விஜய் வீடியோ கால் செய்து பேசலாம் என்று சொன்னது ஜான் ஆரோக்கியசாமி. விஜய் எப்போது கரூர் போக வேண்டும் என்று ஆலோசனை வழங்குவது ஜான் ஆரோக்கியசாமி.
இப்படி ஜான் ஆரோக்கியசாமி சொன்னதை, சொல்வதை மட்டுமே விஜய் கேட்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி கட்சி நடத்த முடியும். ஒரு தலைவர் சுயமாக முடிவு எடுக்க வேண்டும். சில சில ஆலோசனைகளை கேட்கலாம். ஆனால் அவர் எல்லா முடிவுகளையும் ஜான் ஆரோக்கியசாமியை நம்பியே எடுக்கிறார் என்று இரண்டாம் கட்ட தலைகளும் விஜய் மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications