Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நடிகை பெயரை ரிலீஸ் பண்ண வேண்டாம்.. சங்கீதாவை சமாதானப்படுத்த விஜய் முடிவு.. டேமேஜ் கண்ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கிளம்பிய அந்த ஒற்றை 'டைவர்ஸ்' மனு, பனையூர் முதல் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சினிமா கிசுகிசுவாக இருந்திருந்தால் விஜய் வழக்கம்போல 'சைலன்ட் மோடுக்கு' போயிருப்பார்.

ஆனால், இப்போது அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் 'பெண்கள் ஓட்டு' தான் தனது வெற்றிக்கு அச்சாணி என்பதை விஜய் நன்றாகவே அறிவார். அதனால்தான், இப்போது தவெக (TVK) கூடாரத்தில் 'டேமேஜ் கண்ட்ரோல்' பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

கட்சி நிர்வாகிகளுக்கு விழுந்த 'கண்டிப்பான' உத்தரவு!

சங்கீதா மனுத் தாக்கல் செய்த செய்தி கசிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமிருந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு 'வாட்ஸ்அப்' சுற்றறிக்கை பறந்தது.

Vijay is planning to stop Sangeetha from releasing the alleged actress name

"யாரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து சொல்லக்கூடாது. டிவி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது. விஜய்யை ஆதரித்துப் பேசுகிறேன் பேர்வழி என யாராவது வாயை கொடுத்து உளறினால்.. தவறாக பேசினால், அவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்."

தேவையின்றி.. கட்சி அனுமதி இன்றி எந்தவொரு எதிர்வினையும் ஆற்றக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். ஏனெனில், சங்கீதா ஒரு 'அனுதாப பிம்பமாக' மாறினால், அது விஜய்யின் அரசியல் பிம்பத்தைப் பலமாகச் சிதைக்கும்.

சமாதானத் தூது: லண்டன் டூ சென்னை!

சங்கீதா தற்போது லண்டனில் தனது குடும்பத் தொழிலைக் கவனித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் அவர் முன்வைத்திருக்கும் ' infidelity' (துரோகம்) மற்றும் 'மன உளைச்சல்' போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் விஜய்யை அப்செட் ஆக்கியுள்ளன.

இப்போது, விஜய்யின் மிக நெருங்கிய வட்டத்தில் உள்ள சில நண்பர்கள் மற்றும் திரையுலகப் பெரியவர்கள் மூலம் 'சமாதானப் பேச்சுவார்த்தை'களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம். "நீதிமன்றத்தில் பகிரங்கமாக மோதிக் கொள்வதை விட, பரஸ்பரம் பேசி முடித்துக் கொள்ளலாம்" என்பதே இவர்களின் அஜெண்டா.

முக்கியமாக அந்த நடிகையின் பெயரை வெளியிட வேண்டாம் என்று சங்கீதாவிடம் சமாதானம் செய்ய விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாம். சங்கீதாவிடமிருந்து வரப்போகும் அந்தப் 'பத்திரிகையாளர் சந்திப்பு' மிரட்டலைத் தள்ளிப்போட அல்லது ரத்து செய்ய வைக்கவே இந்தத் தீவிர முயற்சிகள்.

எதிர்க்கட்சிகளின் காய்நகர்த்தல்... விஜய்யின் தடுப்பாட்டம்!

ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் கவனித்து வருகின்றன. இப்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, விஜய்யின் 'குடும்பப் பாங்கான' (Family Man) இமேஜை உடைக்க அவர்கள் காத்திருக்கிறார்கள்.

"தனது மனைவியையே பாதுகாக்க முடியாதவர், தமிழகப் பெண்களின் நலனை எப்படிக் காப்பார்?" என்கிற கேள்வியை மறைமுகமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் தூவிவிட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதைப் முறியடிக்கத்தான், "இது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட விஷயம்; அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் முடிச்சுப் போடாதீர்கள்" என்கிற பிரச்சாரத்தை விஜய்யின் ஐடி விங் (IT Wing) ரகசியமாகத் தொடங்கியுள்ளது.

சங்கீதா இறங்கி வருவாரா?

ஏப்ரல் 20-ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்தத் தேதிகள் வருவது விஜய்க்குப் பெரும் பின்னடைவு. இதனால், அதற்கு முன்னதாகவே சங்கீதாவைச் சந்தித்துப் பேசி, ஒரு 'மியூச்சுவல் அக்ரிமென்ட்' (Mutual Agreement) கொண்டு வர விஜய்யின் தரப்பு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

அமைதிக்குப் பெயர் போன சங்கீதா, இத்தனை ஆவேசமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாரென்றால், சமாதானம் அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள் கோலிவுட் புள்ளிகள். விஜயின் 'மாஸ்டர் பிளான்' இங்கே வேலை செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+