திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார்
சென்னை: தமிழக அரசியலில் என்டிஏ கூட்டணிக்குள் நடிகர் விஜய்யை கொண்டு வர பாஜக எடுத்து வரும் தீவிர முயற்சிகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த ரகசிய "கான்ஃபரன்ஸ் கால்" உரையாடல் குறித்த பிரத்யேகத் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன..
தவெக தலைவர் விஜய்யை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.. அப்போது அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், பாஜகவின் தேசிய துணைத்தலைவர் ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டாராம்.

தவெக விஜய்
இந்த விவாதத்தின் போது, பியூஸ் கோயல் மிகவும் எதார்த்தமான அரசியல் சூழலை எடப்பாடியிடம் முன்வைத்துள்ளார்.. "திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிப்பது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே இப்போதுள்ள அவசரத் தேவை.. ஆனால் விஜய்க்கு அப்படியில்லை, அவர் தேர்தலில் தோற்றாலும் மீண்டும் சினிமாவுக்குப் போய்விடுவார்..
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வராவிட்டால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசியுங்கள்.. உங்கள் கட்சியின் சீனியர்களே உங்களுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள்..
அடுத்த 5 ஆண்டுகள் கட்சியை தக்கவைக்கவே நீங்கள் போராட வேண்டியிருக்கும்.. நிர்வாகிகள் பலரும் திமுகவுக்கும், விஜய்க்கும் தாவிவிடுவார்கள்.. எனவே விஜய்யை சேர்ப்பதுதான் நமக்கு பாதுகாப்பு, அதற்கு ஓகே சொல்லுங்கள்" என பியூஸ் கோயல் அழுத்தம் கொடுத்தாராம்.
எடப்பாடி பழனிசாமி
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமியோ, தனது அரசியல் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.. "விஜய்யை கூட்டணியில் சேர்க்க நான் ஒன்றும் எதிரி கிடையாது, ஆனால் அவர் வைக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது.. திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு இணையாகவே அதிமுகவும் போட்டியிடும்..
விஜய்க்கு அதிகபட்சமாக 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும்.. இதைத் தாண்டி அவர் கேட்கும் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி, துணை முதல்வர் மற்றும் கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளை இப்போது பரிசீலிக்கக்கூட முடியாது.. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பேச வேண்டியதை இப்போது ஓகே சொல்ல இயலாது" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
எடப்பாடியின் உடும்பு பிடி பிடிவாதத்துக்கு பிறகுதான், என்டிஏ கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வரும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது..
பாஜக பியூஷ் கோயல்
ஆக, இந்த விவாதத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது.. எடப்பாடி பழனிசாமி தனது தலைமைத்துவத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.. பாஜகவின் டெல்லி மேலிடம் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், தமிழகத்தில் அதிமுகதான் பெரிய அண்ணன் என்பதில் அவர் காட்டும் உறுதி வியக்கத்தக்கதாக உள்ளது..
அதே சமயம், விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பதை விட, அவரது அதிகாரப் பகிர்வு நிபந்தனைகளே எடப்பாடியை தயங்க வைக்கின்றன.. எடப்பாடியின் இந்த ஷாக் பதிலால் அதிர்ச்சியடைந்த பியூஸ் கோயல், உடனடியாக இதனை அமித்ஷாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.. இதன் விளைவாக, தமிழக அரசியல் களம் இப்போது ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-நமது சிறப்பு நிபுணர் எழில்












Click it and Unblock the Notifications