Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ஐடியாவை கேட்டிருக்க கூடாது! ஸ்டாலினா இருந்தா இப்படி செஞ்சிருக்க மாட்டார்! புலம்பி தள்ளிய விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஐ விசாரணைகள் காரணமாக விஜய் நொந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் மொத்தமாக 15 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் விஜய் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

கரூர் வழக்கில் விஜய் சாட்சி என்பதில் இருந்து சந்தேகத்திற்கு உரியவராக மாறி உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது.

Vijay tvk jananayagan

விஜய் மீது பாயும் குற்றப்பத்திரிகை

விஜய் அளித்த பதில்களே இதற்கு காரணம். முக்கியமாக திருச்சியில் இருந்து விஜய் கரூர் வர தாமதம் ஆனது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. இதற்கு விஜய் ரோடு வளைவு நெளிவாக இருந்தது என்று கூறி உள்ளார். அந்த சாலையில் தேசிய ஹைவே இருந்தும் கூட விஜய் இதை கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.

அதற்கு சிபிஐ.. உங்கள் வாகனம் 1 மணி நேரம் இடையில் நின்று இருக்கிறது. உங்கள் போன் சாட்டிலைட் தகவல்கள், அதை உறுதி செய்கின்றன. உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராத நேரத்தில் நீங்கள் போனில் பேசி உள்ளீர்கள். அதற்கான ரெக்கார்ட் உள்ளது. அந்த 1 மணி நேரம் ஏன் வாகனத்தை நிறுத்தி இருந்தீர்கள்? எங்கே இருந்தீர்கள்? என்று சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் புலம்பல்

இந்த நிலையில்தான் நெருக்கமான சில உறவினர்கள் , நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே கரூர் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது.. என்னை தேவையின்றி கோர்த்துவிட்டு விட்டார்கள் என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.

தமிழக அரசு விசாரணை நடத்தி இருந்தால் நமக்கு இவ்வளவு நெருக்கடி இருக்காது. தமிழக அரசு ஒவ்வொரு முறை நம்மை விசாரணைக்கு அழைத்தாலும் அது நமக்கு மைலேஜ்தான். நம்மை தொந்தரவு செய்கிறார்கள்.. துன்புறுத்துகிறார்கள் என்று மைலேஜ் தேற்றி இருக்கலாம்.

விஜய் புலம்பல்

அதோடு விஜய் மீது கைவைத்து இருக்க மாட்டார்கள். அவரை விசாரணைக்கு அழைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இங்கே நிலைமை வேறு மாதிரி உள்ளது. சிபிஐ இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. விஜயை தொடும் திட்டத்திலேயே சிபிஐ காய் நகர்த்தி வருகிறது. இதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு விசாரணையாக இருந்தால்.. இதை விபத்து என்று கூட முடித்திருப்பார்கள்.

இனி டெல்லி தன்னை காலம் முழுக்க இந்த வழக்கை வைத்து கரம் கட்ட திட்டமிடும் என்று விஜய் நினைக்கிறாராம். இதை கட்சியில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் சொல்லி விஜய் புலம்பி இருக்கிறாராம். நெருக்கமான சில உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.

தமிழக அரசு விசாரணை செய்திருந்தால்.. நமக்கு இவ்வளவு பிரஷர் ஏற்பட்டு இருக்காது என்றும் விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது.

அதோடு ஸ்டாலின் கரூர் சம்பவத்திற்கு பின்பு கூட பெரிதாக நம்மை நேரடியாக சீண்டவில்லை. பிரச்சனைகளை சரி செய்யும் விதமாகவே ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் கையில்.. அதாவது போலீஸ் கையில் வழக்கு இருந்திருந்தால் இந்த பிரச்சனை நீடித்து இருக்காது. சிபிஐ விசாரணை கேட்டு போக சொல்லி கொடுத்த ஐடியாவை நாம் கேட்டிருக்க கூடாது என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.

விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

இந்த விசாரணையில் விஜயிடம் பல முக்கியமான விஷயங்கள் கேட்கப்பட்டன. 100 கேள்விகள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அதில் டிக் அடிக்கும் வகையில் முதலில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளித்தார்.

அதன்பின் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. விஜய் தொடர்ந்து அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில்களை அளித்தார்.

இதில் விஜயிடம்.. நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தீர்கள்? கூட்டம் அதிகமாக இருந்தும் கூட நீங்கள் ஏன் பேச்சை தொடர்ந்தீர்கள்? நீங்கள் சம்பவ இடத்தில் போலீஸ் சொன்னதை கேட்டீர்களா? போலீஸ் உங்களிடம் கேட்ட சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையா? உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் என்ன? நீங்கள் பேசிய நேரம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு எல்லாம் விஜய் பெரும்பாலும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை, தமிழக அரசு கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை, தமிழக அரசு மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரவில்லை என்று மட்டுமே பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+