சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எகிறும் டென்ஷன்.. புஸ்ஸி ஆனந்த் கொடுத்த புது லெட்டர் பேடு.. அதை வைத்து விஜய் என்ன செய்தார் தெரியுமா?

விஜய், சந்திரசேகர் இடையே விரிசல் அதிகமாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நித்தம் ஒரு பிரச்சனை.. நித்தம் ஒரு சர்ச்சை என்று விஜய் - எஸ்ஏசி விவகாரத்தில் வெடித்து வருகிறது.. தற்போது விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்த எஸ்ஏசி ஆதரவாளர் மீது புகார் தரப்பட்டுள்ளது.. இன்னொரு பக்கம் எஸ்ஏசியின் ஆதரவாளர்கள் அனைவரையும் விஜய் பொறுப்பில் இருந்து மாற்றி உள்ளார். இப்படி நாளுக்கு நாள் தந்தை - மகனுக்கும் இடையேயான விரிசலில் பரபரப்பு கூடிக் கொண்டே வருகிறது

திடீரென ஒருநாள் விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் காட்டுத்தீயாக பரவ.. அது பொய் என்றானது.. அவரது அப்பா எஸ்ஏசிதான் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, அதற்கு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று பெயரும் வைத்துள்ளார்.

அதற்குபிறகு, "என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணையக் கூடாது. மேலும் எனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவை மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் மற்றும் அணித் தலைவர்களின் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விஜய் எச்சரித்தார்.

விஜய்

விஜய்

உண்மையிலேயே இதுவரை விஜய்க்கும் - அவரது அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என்று வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால், விஜய்யை சுற்றி மாஃபியா கும்பல் இருக்கிறது என்று ஒரு புகாரை சொன்னார்.. இப்படி சொன்ன அடுத்த நாளிலேயே விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானது.

 லெட்டர் பேடு

லெட்டர் பேடு

இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. அப்பா ஆரம்பித்த இயக்கத்தை மகன் கைப்பற்றிவிட்ட நிலையில், அதற்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பதிவெண் இல்லாத ஒரு லெட்டர் பேடு விஜய்க்கு ரெடியாகி உள்ளதாம்.. இதை தயார் செய்து தந்தது மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்.

 விஜய்

விஜய்

அந்த லெட்டர் பேடில், நிர்வாகிகள் மாற்றப்பட்டியலுக்கு முதல்முறையாக விஜய் கையெழுத்திட்டுள்ளார்.. புதிய நிர்வாகிகளின் பெயர்களும் அதன்படியே அறிவிக்கப்பட்டுள்ளன.. அதாவது எஸ்ஏசியின் ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு, முழுக்க முழுக்க விஜய்க்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் இப்போது பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கொடி, சின்னம்

கொடி, சின்னம்

இப்போது சிக்கல் என்னவென்றால், எஸ்ஏ சந்திரசேகரனின் கட்சிக்கும், விஜய்யின் அமைப்புக்கும் ஒரே கொடி பயன்படுத்தப்படுமா? அல்லது விஜய் தன் இயக்கத்துக்கான புது கொடியை மாற்றுவாரா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது... கட்சியின் கொடியை யாரும் பயன்படுத்த கூடாது என்று விஜய் ஏற்கனவே சொல்லி இருந்தநிலையில், கொடி, பெயர், படத்துடன் இயக்கத்தை கைப்பற்றியது எஸ்ஏ சந்திரகேரன்தான்.. அதனால் அவர் மீது நடவடிக்கையை விஜய் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஒன்று.. ஒரு கட்சி ஆரம்பித்து அது உருப்படியாக செயல்படுகிறதோ இல்லையோ.. தினந்தோறும் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் மட்டும் வெளிவந்து கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது !

English summary
Vijay issue and case filed against SA chandrasekar supporter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X