Vijay: ஜனநாயகன், சிபிஐ விசாரணை! 37 நாட்கள் கழித்து இன்று மவுனம் கலைக்கும் விஜய்? மாமல்லபுரத்தில்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று நடைபெறும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஜனநாயகன் படம் குறித்தும் கரூர் கூட்ட நெரிசலில் விவகாரத்தில் தன்னிடம் சிபிஐ விசாரணை குறித்தும் விஜய் வாய் திறந்து பேசுவார் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இத்தனை நாட்களாக மவுனியாக இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே விஜய் தொடர்ந்து திமுகவையே விமர்சித்து வந்தார். திமுகதான் தனது எதிரி என்றார், பாஜக கொள்கை எதிரி என்றும் பேசி வந்தார்.
என்னதான் திமுகவை விமர்சித்தாலும் பாஜக குறித்து அவர் விமர்சிக்காதது பெரும் பேசுபொருளானது. இதே கேள்வியை தான் கேட்ட போது விஜய் தன்னிடம் பதில் சொன்னதாக நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார். "அதாவது தற்போதைய தேர்தல் தமிழகத்திற்கானது, எனவேதான் திமுகவை வலிமையாக எதிர்ப்பதாகவும் பாஜகவை அதற்குரிய களத்தில் எதிர்ப்பேன்" என்றும் விஜய் தன்னிடம் கூறியதாக நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.
விஜய் ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் என்ன பேசுவார், ஆளும் கட்சியை எப்படி நக்கலடிப்பார் என்பதை பார்க்கவே பலர் அவரது பேச்சை கேட்க தொடங்கினர்.
கரூர் சம்பவம்
இப்படி விமர்சனமாக சென்று கொண்டிருந்த போதுதான் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய் பெரிய அளவில் சிக்கிக் கொண்டார். அதிலும் அவர் இந்த சம்பவம் நடந்ததும் மக்களோடு மக்களாக நிற்காமல் அங்கிருந்து ஜெட் வேகத்தில் சென்னைக்கு வந்ததுதான் மிகப் பெரிய பிரச்சினையானது.
விஜய்
இந்த சம்பவத்திற்கு இன்றுவரை அவர் வருத்தமோ மன்னிப்போ தெரிவித்ததில்லை. இந்த கூட்டத்திற்கு பிறகு காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு பொதுக் கூட்டங்களில் எல்லாம் விஜய் கலந்து கொண்டாலும் இதுவரை கரூர் சம்பவம் குறித்து வருந்தியும் ஒரு வார்த்தை பேசியதில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் 20 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை நடத்தியது.
விஜய்க்கு சம்மன்
இந்த நிலையில் விஜய்யிடம் விசாரணை நடத்தவும் சம்மன் அனுப்பி அவர் கடந்த 12ஆம் தேதி, 19ஆம் தேதி என இரு தினங்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் கேள்விகளுக்கான பதில்களையும் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது.
டெல்லி சிபிஐ
இருமுறையும் விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது முகம் வாடியிருந்தது. இதனால் அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்டார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்கள், யூடியூப்களில் பல விதமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கூறியிருந்தனர்.
எத்தனை பிரச்சினை
அரசியலில்தான் இத்தனை இடர்பாடு என்றால் சினிமாத் துறையிலும் விஜய்க்கு பிரச்சினைதான். ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸாக வேண்டியது, ஆனால் சென்சார் பிரச்சினையால் ரிலீஸாகாமல் தற்போது அந்த படம் கோர்ட் வரை போய் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இந்த படம் குறித்தும் தன்னை நம்பி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் குறித்தும் விஜய் வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
37 நாட்கள் கழித்து
இந்த நிலையில்தான் இன்று மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 37 நாட்களுக்கு பிறகு அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொள்கிறார். அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நிறைய விஷயங்களில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இன்று விஜய் இதையெல்லாம் பேசுவார் என்கிறார்கள்.
ஜனநாயகன் ரிலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்சினை குறித்தும் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றது, கூட்டணி குறித்தும் பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்!












Click it and Unblock the Notifications