விஜய் சாப்பிடல, தூங்கலயாம்.. 41 உயிர்கள் போன நேரத்தில்.. PR அரசியல் செய்யும் தவெக
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்க்கு ஆதரவாக தீவிரமாக PR அரசியல் செய்த வருகின்றனர். விஜயின் பெயரை கெடுக்க கூடாது.. அதை காப்பாற்ற வேண்டும் என்பதை முன்னிறுத்தி பல போஸ்டுகளை கோலிவுட் விமர்சர்கள் போட்டு வருகின்றனர்.
41 பேர் கரூரில் பலியாகி உள்ளனர். ஆனால் அந்த உயிர்கள் பற்றி கவலைப்படாமல்.. அதை பற்றி பேசாமல்.. விஜயின் பெயரை காக்க வேண்டும் என்று போஸ்டுகளை போட்டு வருகின்றனர்.

விஜய்க்கு ஆதரவாக வந்த சில PR போஸ்டுகள்
இதில் விஜய்க்கு organic ஆக வந்த போஸ்டுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நேற்று உடனுக்குடன் WeStandWithVijay என்று டேக் வடஇந்தியர் பிஆர் மூலம் செய்யப்பட்டது. அதன்பின் சினிமா ரிவ்யூ பேஜ்கள் பல வரிசையாக இது அரசின் சதி என்று பொய்யாக வதந்திகளை பரப்பினார்கள்.
விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் பலரும் கூட இதேபோல் இது அரசின் சதி என்று பொய்யாக வதந்திகளை பரப்பினார்கள். விஜய் இரங்கல் சொல்லவில்லை, நிர்வாகிகளை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்கவில்லை என்பதை எல்லாம் கேள்வி கேட்காமல்.. விஜய் பெயரை காக்க தீவிரமாக போஸ்ட் செய்தனர்.
விஜய் மோசமான அரசியல்
அதிலும் ஒரு கட்டம் மேலே போய்.. விஜய் சாப்பிடல.. தூங்கல என்றெல்லாம் போஸ்ட் செய்தனர். அங்கே 41 உயிர்கள் போய்விட்டது... விஜய் சாப்பிடாமல் இருப்பதுதான் பிரச்சனை.. இதை பார்த்து நாங்கள் வாக்களிக்க வேண்டுமா? என்று கேட்கும் அளவிற்கு பிஆர் அசிங்கமாக நடந்து கொண்டது.
இன்னும் ஒரு படி மேலே சில விஜய் ஆதரவு பிஆர்க்கள்.. நேரடியாக விஜய்க்காக படங்களின் வீடியோக்களை எடிட் செய்து போடுவது, ஏஐ இமேஜ்களை உருவாக்குவது என்று செய்தனர். ஆனால் தவெக நிர்வாகிகள் யாரும் கரூரில் களத்திலும் உதவவில்லை, மருத்துவமனைக்கும் சென்று ஆறுதல் வழங்கவில்லை. விஜய்யை பொறுத்தவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அரசியல்தான் நிஜ அரசியல் என்று நினைக்கிறார். அதை தாண்டி அவருக்கு எதுவும் தெரியவில்லை.
கரூர் கொடூரத்தை சில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசு பக்கம் திருப்ப தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக அரசு போதிய இடம் கொடுக்கவில்லை, கேட்ட இடத்தை தரவில்லை, போலீஸ் பாதுகாப்பை தரவில்லை, அரசு மின்சாரத்தை நிறுத்திவிட்டது என்றெல்லாம் பொய்யான செய்திகளை பரப்பினார்கள். இதை எல்லாம் போலீசாரை வைத்து உடனுக்குடன் தமிழக அரசு மறுத்து வருகிறது. டாப் போலீஸ் அதிகாரிகளை வைத்து தவெக பரப்பிய தவறான தகவல்களை ஆளும் திமுக மறுத்து வருகிறது.
மன்னிப்பு கேட்கவில்லை
இதுவரை விஜய் வெளியிட்ட இரங்கலோ, மேடைக்கு மேடை பேசும் புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களோ ஒரு இடத்தில் கூட வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. கலங்கிப்போய்.. ஒரு சிறிய மன்னிப்பு கேட்டால் கூட மனித நேயம் தெரிந்து இருக்கும். ஆனால் ஒரு விஜய் ரசிகரும் அதை செய்யவில்லை.
இதன் காரணமாகவே கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது கடுமையான புகார்கள், விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பிஆர் அரசியலை கைவிட்டுவிட்டு மக்களுடன் நில்லுங்கள்.. கோர்ட்டுக்கு போன நேரத்தில் சென்று மக்களை மக்களை பாருங்கள் என்று விஜய்க்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications