பதறியடித்து விஜய் மக்கள் இயக்கம் விளக்கம்.. அண்ணாமலை யாத்திரைக்கு ஆதரவா? கொடியுடன் இருந்தது யார்?
சென்னை: மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் யாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி காட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்த அமைப்பு விளக்கம் கொடுத்து உள்ளது. கொடியோடு இருந்தவர்கள் யார்? விரிவாக பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க ஆயத்தமாகி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவரது ரசிகர்கள் விஜயின் அறிவுறுத்தலின்பேரில் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் 10, 12 ஆம் வகுப்பில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் பரிசுகளை வழங்கினார்.

சில வாரங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர இலவச பாட சாலை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அண்மையில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இப்படி விஜய் மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதுவரை எந்த கட்சிக்கு ஆதரவு என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால், பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி படிக்க வேண்டும் என விஜய் தெரிவித்ததை வைத்து பார்க்கையில் சாதி, மத பாகுபாடுகளை கடந்த சமூக நீதி கொள்கை கொண்ட கட்சியை உருவாக்க விஜய் ஆயத்தமாகி வருவது தெரிகிறது.

இந்த நிலையில் மதுரையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்; என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை சென்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் அதில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பாஜக அண்ணாமலைக்கு ஆதரவாக அவர்கள் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications