துணை முதல்வர்.. செங்கோட்டையனுக்கு ப்ரோமோஷன்! விஜய் வைத்திருக்கும் எதிர்பாரா கிஃப்ட்! செம ஹேப்பி!
சென்னை: தமிழக அரசியல் களம் புதிய பரபரப்பின் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் தலைமையிலான ஆட்சி அமைய தவெக உடன் 'கை' கோர்த்திருக்கிறது காங்கிரஸ். அரைக்கிணறை தாண்டியுள்ள விஜய்க்கு இன்னும் 5 முதல் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், பதவியேற்பு விழா, அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு என தவெக கூலாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியமைப்புக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டாலும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை குறித்து அரசியல் வட்டாரங்களில் பல கணிப்புகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

விஜய் அமைச்சரவை
விஜய் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களை வீழ்த்திய எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி கே.ஏ.செங்கோட்டையன், சத்யபாமா, வி.எஸ்.பாபு, டி.கே.பிரபு, விஜயலட்சுமி, இசிஆர் சரவணன், சபரிநாதன் உள்ளிட்ட பலரும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை முதல்வர் பதவி
குறிப்பாக, கேஏ செங்கோட்டையனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. அதிமுகவில் அமைச்சராக நீண்ட காலம் செயல்பட்ட செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் வலுவான ஆதரவு கொண்டவர் என அறியப்படுகிறார். அவர் சமீபத்தில் எடுத்த அரசியல் முடிவுகள், குறிப்பாக தவெகவுடன் இணைந்தது, பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அந்த முடிவு தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தில் தவெக பெற்ற வெற்றியில் செங்கோட்டையனின் பங்கு குறிப்பிடத்தக்கது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த வெற்றிகள், அந்த பகுதிகளை தவெக சாதகமாக மாற்றியுள்ளது. மேலும், விஜய் பிரச்சாரத்திலும் செங்கோட்டையனின் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில், ஆட்சியை நிலைநிறுத்த அனுபவமுள்ள தலைவர்கள் அவசியம் என விஜய் உணர்ந்தே இருக்கிறார் என கூறப்படுகிறது.
அதிகாரத்தில் பங்கு
அதனால் தான் செங்கோட்டையனை துணை முதல்வராக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது "அதிகாரத்தில் பங்கு" என்ற கோஷத்தை முன்வைத்திருந்த விஜய், அதை நடைமுறையில் கொண்டு வர முயற்சி எடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அமைச்சரவை அமைப்பு
இன்னொரு பக்கம், இந்த தகவல்கள் அனைத்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அமைச்சரவை அமைப்பு, துணை முதல்வர் நியமனம் போன்றவை இறுதி கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும். மொத்தத்தில், விஜய் தலைமையிலான புதிய ஆட்சி எப்படி அமையும், அதில் கே.ஏ. செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்க தலைவர்களுக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications